Close

Employment Department.

Publish Date : 05/03/2026

செ.வெ.எண்:-20/2026

நாள்:05.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் பங்குகொள்ள இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளின் தரத்தினை மேம்படுத்திட வல்லுநர்களைத் தேர்வு செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி வகுப்பு எடுக்க போட்டித் தேர்வுகளில் முன்அனுபவம் வாய்ந்த UPSC, SSC, RRB, TNPSC Group-I, Group-II/IIA, Group-IV போன்ற போட்டித் தேர்வுகளில் அனுபவம் வாய்ந்த மற்றும் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்காணல் வரை சென்ற தேர்வர்கள் மற்றும் பொதுத் தமிழ், நுண்ணறிவுத் திறன், கணிதம், அரசியலமைப்பு, வரலாறு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் போன்ற பாடங்களில் நிபுணத்துவம் கொண்ட வல்லுநர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய சுய விவரக் குறிப்புகளுடன் (Bio-data, Resume) திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளுமாறும் மேலும் விபரங்களுக்கு 9499055924 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.