Fisheries and Fishermen Welfare
செ.வெ.எண்:-32/2025
நாள்:-11.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பரப்பலாறு, சின்னபெரியகோம்பை மற்றும் குதிரையாறு நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பரப்பலாறு, சின்னபெரியகோம்பை மற்றும் குதிரையாறு நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 07.04.2025 முதல் 21.04.2025 பிற்பகல் 02.00 மணிவரை வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி திறப்பு 21.04.2025 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும். ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் காணலாம்.
தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம் 80 அடி ரோடு, நேரூஜி நகர், திண்டுக்கல் – 624 001 என்ற முகவரியிலும் 0451 – 2900148 என்ற அலுவலக தொலைபேசி எண் மற்றும் 9384824535 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.