Close

Fisheries and Fishermen Welfare Department invites tenders for Chinnaperiyakombai reservoir.

Publish Date : 31/12/2025

செ.வெ.எண்:-78/2025

நாள்: 31.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை
5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 05.01.2026 முற்பகல் 09.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 19.12.2025 முதல் 05.01.2026 முற்பகல் 09.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி திறப்பு 05.01.2026 அன்று முற்பகல் 11.00 மணியளவில் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும். ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் காணலாம்.

தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு 80 அடி ரோடு, நேரூஜி நகர்,
திண்டுக்கல் – 624 001 என்ற முகவரியில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலும் அல்லது தொலைபேசி
எண். (0451 – 2900148, 9751664565)-ற்கும் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.