Grama saba meeting
செ.வெ.எண்:-50/2024
நாள்:-22.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 23.11.2024 கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
01.11.2024 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்துவைக்கப்பட்டு, தற்பொழுது 23.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கிராமசபை கூட்டத்தில், கிராம ஊராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல். கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டியிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். துய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். ஜல் ஜீவன் இயக்கம். தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம். கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு. கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். எனவே ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.