Hon’ble CM of Tamil Nadu, Thiru M.K. Stalin VC – Hon’ble Minister for RD ,Thiru I. Periyasamy (UT Scheme and Social Welfare Scheme).
செ.வெ.எண்:-07/2026
நாள்: 04.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கொள்ளார் கிராமத்திற்குட்பட்ட சிப்காட் வளாகத்தில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பி.எஸ்.என்.ஏ.மஹாலில் நடைபெற்ற விழாவில், 9,809 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான முதியோர் உதவித்தொகையினையும், 51 பயனாளிகளுக்கு ரூ.69.02 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கொள்ளார் கிராமத்திற்குட்பட்ட சிப்காட் வளாகத்தில் இன்று (04.02.2026) ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம்,பி.எஸ்.என்.ஏ.மஹாலில் இன்று (04.02.2026) நடைபெற்ற விழாவில், 9,809 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான முதியோர் உதவித்தொகையினையும், 51 பயனாளிகளுக்கு ரூ.69.02 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற நோக்கில் செயலாற்றி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ், கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களின் கனவுகளை வீடுவீடாக செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களை பார்க்க வேண்டுமென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதற்காகவும், போக்குவரத்து சிரமங்கள் உள்ளிட்ட இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாக கூடாது என்பதற்காகவும், அனைத்து அரசு அலுவலர்களும் உங்கள் வீட்டை தேடி, உங்கள் ஊரை தேடி வருகின்ற திட்டமான ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கொள்ளார் கிராமத்திற்குட்பட்ட சிப்காட் வளாகத்தில், ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில், ஆத்தூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் வேடசந்தூர் உள்ளிட்ட 10 வட்டங்களைச் சேர்ந்த 83,868 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஓய்வூதியத் தொகை மற்றும் இதர ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 9,809 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான முதியோர் உதவித்தொகை மற்றும் ஏனைய சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது. எனவே, இனிவரும் காலங்களில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 93,677 பயனாளிகள் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகைகளை மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் பெற்று பயனடைவார்கள்.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (மாவட்ட தொழில் மையம்) சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.28.30 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 49 பயனாளிகளுக்கு ரூ.40.72 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.69,02,480 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில்இ அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். 
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 07.01.2026-அன்று நடைபெற்ற அரசு விழாவில் 1 இலட்சத்து 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அதிகளவில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்ட மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் விளங்கி வருகிறது. தொடர்ந்து, நமக்கென்று நமது ஊரில் ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். அந்த கனவை நனவாக்கும் நோக்கில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 2 இலட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து. தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களின் முன்னெடுப்பின் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில், ஆத்தூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் வேடசந்தூர் உள்ளிட்ட 10 வட்டங்களைச் சேர்ந்த 83,868 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஓய்வூதியத் தொகை மற்றும் இதர ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 9,809 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான முதியோர் உதவித்தொகை மற்றும் ஏனைய சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது. எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி.ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ஹென்றி பீட்டர், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.ராஜேந்திரன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.