Close

Jallikattu – Notification

Publish Date : 12/01/2025

செ.வெ.எண்:-25/2025

நாள்:10.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு அறிவிக்கையின்படி, ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரிய கலையம்புத்தூர் கிராமத்தில் 16.01.2025 அன்று வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கேட்கப்பட்டுள்ள விபரங்களுடன் 11.01.2025-ம் தேதி காலை 08.00 மணி முதல் 13.01.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், முதலானவற்றை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

அதேபோல், மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான பதிவுகளையும் மேற்சொன்ன https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள காளையின் உரிமையாளர்கள் https://dindigul.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் விதிகளின்படி டோக்கன் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு, டோக்கள் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேற்கண்ட விபரங்கள் இடம் பெறாத ஆன்லைன் பதிவுகள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டு ஆன்லைன் மூலமாகவே அவர்களுக்கு வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.