Kalaignar Sports Kit
செ.வெ.எண்:-44/2026
நாள்:-16.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு கற்பக விநாயகா மஹாலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளைாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு கற்பக விநாயகா மஹாலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளைாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை திண்டுக்கல் மாவட்டம், பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் (Kalangar Sports Kit) மாநகராட்சி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புதுக்கோட்டையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்கள். 
விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக வழங்கினார்கள் என்று இல்லாமல் மாணவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் நல்ல முறையில் படித்து உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினை நிறைவேற்ற உடலும் மனமும் நல்ல முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அதிகப்படியான விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கி உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை அதிகப்படியான மாணவ, மாணவர்களின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு சிறப்பாக மேற்கொண்டுள்ளார்கள். அதேபோல் நகர்புற பகுதிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கி உள்ளார்கள். இந்த விளையாட்டு உபகரணங்களை ஒரு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்து நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளிலுள்ள 486 வார்டுகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் (Kalaignar Sports Kit) 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 657 தொகுப்புகள் வழங்கப்பட்டது. கிரிக்கெட் பேட் ஸ்டம்ப்ஸ், கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் கிட் பை, கைப்பந்து, வலை, பம்ப், கால்பந்து, வலைபந்து, கேரம், சிலம்பம், சதுரங்கம், இறகுப்பந்து, டேப், கோன், தொப்பி 100, சீருடை (T.Shirt 100) ஸ்கிப்பிங் கெட்டில்பெல், தம்புள்ஸ். ஏஜிலிய லேடர். ரெசிஸ்டன்ஸ் பேன்டு ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அலுவலகத்தில் குழு உறுப்பினர்களாக பதிவு செய்து உரிய முறையில் விளையாட்டு உபகரணங்களை பெற்று பயிற்சி மேற்கொள்ளலாம். ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கிய கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளைாட்டு உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தர்.
இவ்விழாவில், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ஆர்.இராஜா, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சுவேதா, பழனி நகராட்சி ஆணையாளர் திரு.டிட்டோ, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.இரா.சிவா, துறை அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.