millets function
செ.வெ.எண்:- 56/2025
நாள்:-25.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழா 29.01.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழா 29.01.2025 (புதன்கிழமையன்று) திண்டுக்கல்-பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சிறுதானிய உணவுத் திருவிழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசுக்கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத்திருவிழாவில் பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களால் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி, விழிப்புணர்வு குறித்த விளக்கவுரைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
எனவே, மாநில அளவிலான சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சியினை பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, விழாவில் கலந்து கொண்டு சிறுதானியங்களின் பயன்பாடு மற்றும் சிறப்புகளை தெரிந்துகொண்டு, பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.