Close

“My Country, My Vote” Awareness Rally

Publish Date : 05/03/2026

செ.வெ.எண்:-14/2026

நாள்: 04.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்,தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 850-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நடத்தப்பட்ட “என் நாடு என் வாக்கு” விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., கலந்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 850-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நடத்தப்பட்ட “என் நாடு என் வாக்கு” விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் இன்று (04.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., கலந்து கொண்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடைபெறுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இப்பேரணியில், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி, அரசு செவிலியர் கல்லூரி, ஜி.டி.என்.கல்லுாரி, பார்வதீஸ் கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் “100% தவறாமல் வாக்களிப்போம்” “எனது வாக்கு எனது உரிமை” “என் வாக்கு என் இந்தியா” “உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்” ஆகிய முழக்கங்களை தொடர்ந்து எழுப்பப்பட்டும், தேர்தல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறும் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இப்பேரணியானது திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, தலைமை தபால் நிலையம் – பேருந்து நிலையம் – அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, தேர்தல் வட்டாட்சியர் (தனி) திரு.முத்துராமன் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.