Close

Pensioners Grievance Day Petition

Publish Date : 24/07/2024
.

செ.வெ.எண்:-63/2023

நாள்:-23.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் திரு.சி.கமலநாதன் தலைமையில் இன்று(23.07.2024) நடைபெற்றது.

ஓய்வூதியதாரர்களிடம் குறைகள் தொடர்பாக மனுக்கள் பெற்று, அதனை தீர்த்து வைக்கும் வகையில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நிலுவைத்தொகை, திருத்திய ஊதிய நிர்ணயம், பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத்தொகை, சிறப்பு சேமநல நிதி, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஓய்வூதியர்கள் மனுக்கள் அளித்தனர்.

இக்கூட்டத்தில், உதவி ஆணையர்(கலால்) திரு.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திருமதி கா.கனகவல்லி, மாவட்ட கருவூல அலுவலர்(மு.கூ.பொ.) திருமதி மு.புனிதாராணி, முதுநிலை கண்காணிப்பாளர் திரு.ரிச்சர்ட்பேட்ரிக் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.