Close

Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM)- MARCH 2026.

Publish Date : 06/03/2026

செ.வெ.எண்:-25/2026

நாள்:-06.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில், அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 09.03.2026 அன்று தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தகவல்

இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM)- MARCH 2026 (தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்) திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில், அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 09.03.2026 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 10,560/- முதல் ரூபாய் 12,000/-வரை வழங்கப்படும்.
எனவே இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தொடர்புக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அவர்களை 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்க விரும்புவோர் திண்டுக்கல், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு 09.03.2026 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நேரில் வந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.