Republic Day Celebration
செ.வெ.எண்: 73/2026
நாள்:26.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்
தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 125 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 450 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், 12 பயனாளிகளுக்கு ரூபாய் 92,66,500 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு இன்று (26.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் மரு.பி.சாமிநாதன், இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.நாக சதீஷ் கிடிஜாலா, இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. முதலமைச்சர் காவலர் பதக்கம் 95 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து 52 விடுதலைப் போராட்ட தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகள், உடல் உறுப்புதானம் செய்தோர் 4 குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, கொளரவித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, நில அளவை மற்றும் பராமரிப்புத்துறை, கல்வித்துறை, மருத்துவக் கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மீன்வளம் மற்றும மீனவர் நலத்துறை, வனத்துறை, புள்ளியியல் துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை, உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை என மொத்தம் 450 அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.1,01,800 இலட்சம் மதிப்பீட்டிலும், வருவாய் துறையின் சார்பில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.55,500 ஆயிரம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் (மத்திய கூட்டுறவு வங்கி) சார்பில், 2 பயனாளிகளுக்கு சுய உதவி குழு கடன் ரூ.40,00,000 இலட்சம் மதிப்பீட்டிலும், தொழில் துறையின் (மாவட்ட தொழில் மையம்) சார்பில், 1 பயனாளிகளுக்கு மானியத் தொகை ரூ.16,00,000 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகள் ரூ.12,200 ஆயிரம் மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் சார்பில், 1 பயனாளிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1,00,000 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறையின் (மகளிர் திட்டம்) சார்பில், 2 பயனாளிகளுக்கு வங்கி கடன் ரூ.24,00,000 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில், 1 பயனாளிக்கு பசுமை குடில் அமைப்பதற்கு ரூ.10,00,000 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.92,66,500 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, ரெட்டியார்சத்திரம் ஆறுபடையப்பா உயர்நிலைப்பள்ளி, கொழிஞ்சிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, திண்டுக்கல் புனித செசிலியாள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் எம்.எஸ்.பி.மேல்நலைப்பள்ளி, திண்டுக்கல் அச்சுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியைச் சேர்ந்த 436 மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் கண்கவர் கலைநிகழ்ச்சியை நடத்தினர். நிறைவாக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாலை அணிவித்து, மலர் துாவி மாரியாதை செலுத்தினார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி அவர்கள் ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.






