Close

Science Festival – Function

Publish Date : 04/02/2026

செ.வெ.எண்: 03/2026

நாள்: 02.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியில் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துறைத்தலைவர் (ரோபோட்டிக்ஸ்) முனைவர்.அ.ஆண்ட்ரூ அவர்கள் சிறப்புரையாற்றினார்.

திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சயில் இன்று (02.02.2026) காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துறைத்தலைவர் (ரோபோட்டிக்ஸ்) முனைவர்.அ.ஆண்ட்ரூ அவர்கள் சிறப்புரையாற்றினார்.திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த, அறிவியல் திருவிழாவில் இஸ்ரோவிலிருந்து நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள், சூரிய ஆய்வகம் (Solar Observatory), கோளரங்கம் ((Planetarium), கருத்தரங்க நிகழ்ச்சிகள் (தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் புதுமைகள் குறித்த உரை) உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த திருவிழாவின் ஆறாம் நாளான இன்றைய தினம் அறிவியல் திருவிழாவிற்கு இன்றைய படைப்பை வழங்க வந்திருக்கும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை வரவேற்று வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெயர்களை பதிவு செய்து அவர்களின் படைப்புகளையும் பதிவு செய்து அவர்கள் இருப்பிடங்களில் அவர்களது படைப்புகளை காட்சிப்படுத்த வழிகாட்டும் பணியில் பதிவுக்குழு தன்னார்வலர் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, அறிவியல் திருவிழாவில் காலை 10 மணியிலிருந்து 9-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட வந்திருக்கும் பள்ளியின் பெயர், மாணவர்களின் எண்ணிக்கை, பொறுப்பு ஆசிரியர்கள் பெயர் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட பதிவுகளை ஆசிரியர்கள் பதிவு செய்து கொண்டனர். மேலும், பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து பார்வையிட வரும் மாணவர்களை முறையாக சீர்படுத்தி அவர்களை அமைதியாக காணும் முறையில் கட்டுப்பாட்டு குழு மற்றும் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் இணைந்து வழிநடத்தி வருகின்றனர். இன்றுவரை அறிவியல் திருவிழாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர். மேலும், அறிவியல் திருவிழா நடைபெறும் மைதானத்தில் இன்றைய தினம் வைக்கப்பட்டிருந்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களிடம் மாணவ, மாணவியர்கள் உரையாடுவது போன்றும், விண்வெளி வீரர்கள் உடை அணிந்து செல்பி எடுப்பது போன்றும் வைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும், திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நாளை (03.02.2026) நிறைவடைகிறது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் இந்த அறிவியல் திருவிழாவினை உரிய முறையில் பயன்படுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இன்றை தினம் நடைபெற்று வரும் அறிவியல் திருவிழாவில், கோயம்புத்தூர் PSG பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) முனைவர்.ஆர்.நடராஜன் அவர்கள், சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவன (IIT) உதவிப் பேராசிரியர் முனைவர்.இ.ஹேம பிரபா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.