Close

Science Festival Inspection

Publish Date : 02/02/2026
.

செ.வெ.எண்: 97/2026

நாள்: 31.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சயில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியரின் அறிவியல் படைப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சயில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியரின் அறிவியல் படைப்புகளை இன்று (31.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த, அறிவியல் திருவிழாவில் இஸ்ரோவிலிருந்து நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள், சூரிய ஆய்வகம் (Solar Observatory), கோளரங்கம் (Planetarium), கருத்தரங்க நிகழ்ச்சிகள் (தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் புதுமைகள் குறித்த உரை) உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த திருவிழாவின் நான்காம் நாளான இன்றைய தினம் அறிவியல் திருவிழாவிற்கு இன்றைய படைப்பை வழங்க வந்திருக்கும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை வரவேற்று வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெயர்களை பதிவு செய்து அவர்களின் படைப்புகளையும் பதிவு செய்து அவர்கள் இருப்பிடங்களில் அவர்களது படைப்புகளை காட்சிப்படுத்த வழிகாட்டும் பணியில் பதிவுக்குழு தன்னார்வலர் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றை தினம் நடைபெற்று வரும் அறிவியல் திருவிழாவில், 24 தனியார் பள்ளிகளும், 16 அரசு உதவி பெறும் பள்ளிகளும் தங்களது அறிவியல் படைப்புகளை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அறிவியல் திருவிழாவில் பங்கேற்று வரும் தன்னார்வலர் மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை, உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அறிவியல் திருவிழாவில் காலை 10 மணியிலிருந்து 9-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட வந்திருக்கும் பள்ளியின் பெயர், மாணவர்களின் எண்ணிக்கை, பொறுப்பு ஆசிரியர்கள் பெயர் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட பதிவுகளை ஆசிரியர்கள் பதிவு செய்து கொண்டனர். மேலும், பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து பார்வையிட வரும் மாணவர்களை முறையாக சீர்படுத்தி அவர்களை அமைதியாக காணும் முறையில் கட்டுப்பாட்டு குழு மற்றும் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் இணைந்து வழிநடத்தி வருகின்றனர். அறிவியல் திருவிழாவில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றை தினம் நடைபெற்று வரும் அறிவியல் திருவிழாவில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் (உயிரியல்துறை) பேரா.முனைவர்.சி.ராஜ்மோகன், சென்னை அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற தலைமை விஞ்ஞானி பத்மஜோதி கு.சி.ஐயப்பன், சென்னை உலகத் தமிழ் வர்த்தக மைய இயக்குநர் முனைவர்.எம். நாச்சிமுத்து அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.