Science Reels Competition
செ.வெ.எண்:- 14/2025
நாள்: 08.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து 2026 இல் நடத்தும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டலில் அறிவியல் சுருள்படப் போட்டி(Science Reels Competition) அறிவிக்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் 18 வயது நிரம்பியவர்கள் எவரும் 60 நொடிகளுக்குள் சுருள்படங்களைச் சமூகத்தளங்களில் வெளியிடலாம்.சுருள்பட உள்ளடக்கமானது ஒரு அறிவியல் தத்துவத்தையோ, கருவிகளின் அறிவியல் செயல்முறையையோ, இயற்கையின் அறிவியலையோ, தொழில்நுட்பம், புத்தாக்கம், சுற்றுச்சூழல், விண்வெளி, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), வேளாண் அறிவியல் போன்ற தலைப்புகளிலோ இருக்கலாம். அதன் மூலம் அறிவியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன், புதிய கண்டுபிடிப்பு எண்ணங்கள் சமூகத்தில் பரவ வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டி டிசம்பர் 8 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும், இதில் தேர்வு செய்யப்பட்ட குறுஞ்காணொளிகள் 2026 திண்டுக்கல் அறிவியல் திருவிழாவில் பரிசளிக்கப்பட்டு, காட்சிக்கும் வைக்கப்படும். மேலும் விவரங்கள் https://dindigulsciencefest.com/reels என்ற இணைதளம் மற்றும் சுருள்படப் (Reels) போட்டி தொடர்பான விவரங்களுக்கு சைமன் அவர்களின் 7708928527 அலைபேசி எண்ணிலும் மற்றும் simonvis.com@gmail.com மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.