Small Grain Traditional Food Festival Contests and Sales Exhibitions.
செ.வெ.எண்:-22/2026
நாள்:-05.03.2026
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகள் மற்றும் விற்பனை கண்காட்சிகள் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகி வருவதால், இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அடிதட்டு மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நிலையான ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் உள்@ரில் கிடைக்கும் சிறுதானியங்கள், கீரைவகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டே சரிவிகித உணவை பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வட்டார அளவில் சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகள் மற்றும் விற்பனை கண்காட்சிகள் நடத்துவதன் மூலம் பாரம்பரிய உணவின் மகத்துவத்தை அனைவரும் மீண்டும் பெற்றிட உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் 06.03.2026 அன்று குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், சாணார்பட்டி, நிலக்கோட்டை, வடமதுரை மற்றும் தொப்பம்பட்டி ஆகிய 7 வட்டாரங்களிலும், 07.03.2026 அன்று திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய 7 வட்டாரங்களில் ஆக மொத்தம் 14 வட்டாரங்களில் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகள் மற்றும் விற்பனை கண்காட்சிகள் நடைபெறவுள்ளதால், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய வட்டாரங்களில் நடைபெறும் போட்டிகள் மற்றும் விற்பனை கண்காட்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.