Sport Dept – Competition
செ.வெ.எண்:-95/2025
நாள்:-23.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 26-08-2025 முதல் 12-09-2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கீழ்கண்டவாறு காலை 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் நகல், பிறந்த தேதி சான்று, பள்ளி மற்றும் கல்லூரியில் பயில்வதற்கான சான்று (Bonafide or ID card), மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் அரசு ஊழியர்கள் (பணிபுரியும் அடையாள அட்டை) மாற்றுத்திறனாளிகள் ( மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை) பொதுப் பிரிவு ( இருப்பிட சான்று) ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வருதல் வேண்டும். மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் அனைவரும் கண்டிப்பாக விளையாட்டுச் சீருடை மற்றும் காலணியுடன் பங்கேற்க வேண்டும்.
கீழ்கண்டவாறு போட்டிகள் நடைபெற உள்ளது.
26-08-2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்
பள்ளி பிரிவு- தடகளம் – மாணவ, மாணவிகள் – கூடைப்பந்து (மாணவர்கள் – மாநகராட்சிமைதானம், மாணவிகள் மாவட்ட விளையாட்டரங்கம்) பள்ளி பிரிவு– கபாடி (மாணவிகள் ) நீச்சல் (மாணவ, மாணவிகள் – மாவட்ட விளையாட்டரங்கம்) கல்லூரி – நீச்சல் (மாணவ, மாணவிகள் – மாவட்ட விளையாட்டரங்கம்)
28-08-2025 அன்றுமாவட்டவிளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு – கேரம் – மாணவ, மாணவிகள் – ஸ்ரீ வாசவி மெட்ரிக் மே நி பள்ளி)
கல்லூரி பிரிவு – இறகுப்பந்து – மாணவர்கள் ( மாவட்ட உள்விளையாட்டரங்கம், திண்டுக்கல்)
கல்லூரி பிரிவு – கூடைப்பந்து (மாணவர்கள் – மாநகராட்சிமைதானம், மாணவிகள் மாவட்ட விளையாட்டரங்கம்) கல்லூரி பிரிவு – கிரிக்கெட் – மாணவர்கள் ( ஆர்.வி.எஸ் கல்லூரி/ ஜி.டி.எண் கல்லூரி) கல்லூரி பிரிவு – கபாடி – மாணவர்கள் (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்)
29-08-2025 அன்றுமாவட்டவிளையாட்டரங்கம்.
கல்லூரி பிரிவு – இறகுப்பந்து – மாணவிகள் (மாவட்ட உள்விளையாட்டரங்கம், திண்டுக்கல்)
கல்லூரி பிரிவு – சதுரங்கம் – மாணவ, மாணவிகள் (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – கேரம் – மாணவ, மாணவிகள் – ஸ்ரீ வாசவி மெட்ரிக் மே நி பள்ளி, திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – ஹாக்கி – மாணவிகள் ( மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – கபாடி – மாணவிகள் ( மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்)
30-08-2025 அன்று மாவட்ட விளையாட்டரங்கம்.
கல்லூரி பிரிவு – ஹாக்கி – மாணவர்கள் ( மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – கையுந்துப்பந்து – மாணவர்கள் -(மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) கல்லூரிபிரிவு- கிரிக்கெட் – மாணவிகள் – (ஜி.டி.என்கல்லூரி, ஆர். வி. எஸ். கல்லூரி) பொதுப் பிரிவு – கிரிக்கெட் – பெண்கள் – (ஜி.டி.என்கல்லூரி, ஆர். வி. எஸ். கல்லூரி) பொதுப் பிரிவு – கேரம் – ஆண்கள், பெண்கள் – ஸ்ரீ வாசவி மெட்ரிக் மே நி பள்ளி, திண்டுக்கல்) பொதுப் பிரிவு – இறகுப்பந்து – ஆண்கள், பெண்கள் – (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்)
01.09.2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு -இறகுப்பந்து – மாணவர்கள் – ( மாவட்ட உள்விளையாட்டரங்கம், திண்டுக்கல்) பள்ளி பிரிவு – கிரிக்கெட் – மாணவிகள் – (ஜி.டி.என்கல்லூரி, ஆர். வி. எஸ். கல்லூரி) பள்ளி பிரிவு – கால்பந்து – மாணவிகள் – (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) பள்ளி பிரிவு – கபாடி – மாணவர்கள் – (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) பள்ளி பிரிவு – கைப்பந்து – மாணவிகள் – (சேரன் வித்யாலயா மே நி பள்ளி, சின்னாளப்பட்டி) கல்லூரி பிரிவு – கைப்பந்து – மாணவிகள் – (சேரன் வித்யாலயா மே நி பள்ளி, சின்னாளப்பட்டி) அரசு ஊழியர்கள் – கேரம் – ஆண்கள், பெண்கள் – ஸ்ரீ வாசவி மெட்ரிக் மே நி பள்ளி, திண்டுக்கல்).
02.09.2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு-இறகுப்பந்து – மாணவிகள் – (மாவட்ட உள்விளையாட்டரங்கம், திண்டுக்கல்) பள்ளி பிரிவு – சதுரங்கள் – மாணவ, மாணவிகள் – (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) பள்ளி பிரிவு – கால்பந்து – மாணவர்கள் – (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) பள்ளி பிரிவு – கைப்பந்து – மாணவர்கள்- (சேரன் வித்யாலயா மே நி பள்ளி, சின்னாளப்பட்டி) பள்ளி பிரிவு – மேஜைப்பந்து – மாணவ, மாணவிகள் – (பி.எஸ். என்.ஏ கல்லூரி, திண்டுக்கல்) பள்ளி பிரிவு – கையுந்துப்பந்து – மாணவர்கள் (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – பூப்பந்து – மாணவர்கள் – (பி.எஸ். என்.ஏ கல்லூரி, திண்டுக்கல்).
03-09-2025 அன்று மாவட்ட விளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு – கிரிக்கெட் – மாணவர்கள் – (ஜி.டி.என்கல்லூரி, ஆர். வி. எஸ். கல்லூரி) பள்ளி பிரிவு – சிலம்பம் – மாணவர்கள் – மாவட்ட உள்விளையாட்டரங்கம் , திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – மேஜைப்பந்து – மாணவ, மாணவிகள் – (பி.எஸ். என்.ஏ கல்லூரி, திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – பூப்பந்து – மாணவிகள் – (பி.எஸ். என்.ஏ கல்லூரி, திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – கைப்பந்து – மாணவர்கள் – (சேரன் வித்யாலயா மே நி பள்ளி, சின்னாளப்பட்டி) பொதுப்பிரிவு – கபாடி – ஆண்கள் – (மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்)
04-09-2025 அன்றுமாவட்டவிளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு – சிலம்பம் – மாணவிகள் ( மாவட்ட உள்விளையாட்டரங்கம். திண்டுக்கல்) பள்ளி பிரிவு – கையுந்துப்பந்து – மாணவிகள் ( மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – கையுந்துப்பந்து – மாணவிகள் ( மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) கல்லூரி பிரிவு – கால்பந்து – மாணவிகள் ( மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) பொதுப் பிரிவு – கால்பந்து – மாணவிகள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்)
05-09-2025 அன்று மாவட்ட விளையாட்டரங்கம்.
கல்லூரி பிரிவு – கால்பந்து – மாணவர்கள் ( மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்)
06-09-2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
கல்லூரி பிரிவு – சிலம்பம் – மாணவ, மாணவிகள் – (மாவட்ட உள்விளையாட்டரங்கம், திண்டுக்கல்) பொதுப்பிரிவு – கையுந்துப்பந்து – ஆண்கள், பெண்கள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்)
07-09-2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
பொதுப்பிரிவு – கபாடி – பெண்கள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்).
08-09-2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு – கோ-கோ – மாணவர்கள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) பொதுப்பிரிவு – கால்பந்து – ஆண்கள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) பொதுப்பிரிவு – சிலம்பம் – ஆண்கள், பெண்கள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்)
09-09-2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு – கோ-கோ – மாணவிகள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) பொது பிரிவு – கிரிக்கெட் – மாணவர்கள் – (ஜி.டி.என்கல்லூரி, ஆர். வி. எஸ். கல்லூரி).
10-09-2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
கல்லூரி பிரிவு – தடகளம் – மாணவ, மாணவிகள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) பொதுப் பிரிவு – தடகளம் – ஆண்கள், பெண்கள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்).
11-09-2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு – ஹாக்கி – மாணவர்கள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) அரசு ஊழியர்கள் பிரிவு – ஆண்கள்,(ம)பெண்கள் – தடகளம், இறகுப்பந்து, சதுரங்கம், கபாடி, கையுந்துப்பந்து
12-09-2025 அன்று மாவட்டவிளையாட்டரங்கம்.
பள்ளி பிரிவு – ஹாக்கி – மாணவிகள் (மாவட்ட விளையாட்டரங்கம். திண்டுக்கல்) மாற்றுத்திறனாளிகள் பிரிவு – ஆண்கள் (ம) பெண்கள் – தடகளம், இறகுப்பந்து, கபாடி, கையுந்துப்பந்து, சக்கர நாற்காலி மேஜைப்பந்து மற்றும் எறிப்பந்து.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624 004, தொலைபேசி எண் – 7401703504 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.