Close

Sports Dept(C.M. Youth Festival – Idhu Namma Aattam online Register

Publish Date : 09/01/2026

செ.வெ.எண்:-16/2026

நாள்: 08.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – ”இது நம்ம ஆட்டம்” விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம் என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவில். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள (01-01-1991 முதல் 31.12.2009 இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது). ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டிகள் 22.01.2026 முதல் 25.01.2026 வரை ஊராட்சி ஒன்றிய அளவிலும், 30.01.2026 முதல் 01.02.2026 வரை மாவட்ட அளவிலான போட்டிகளும், 06.02.2026 முதல் 08.02.2026 வரை மாநில அளவிலான போட்டிகளும் நடத்தி உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் :

(அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும்)

1. தடகளம் – 100 மீ, குண்டு எறிதல் – ஆண்கள் மற்றும் பெண்கள்

2. கபாடி– 8 நபர்கள் ஒரு அணியில்- ஆண்கள் மற்றும் பெண்கள்

3. கையுந்துப்பந்து-7 நபர்கள் ஒரு அணியில்- ஆண்கள் மற்றும் பெண்கள்

4. கேரம்- இரட்டை பிரிவு மட்டும்- ஆண்கள் மற்றும் பெண்கள்

5.கயிறு இழுத்தல் -9 நபர்கள் ஒரு அணியில் – ஆண்கள் மற்றும் பெண்கள்

6. ஸ்டீரீட் கிரிக்கெட் – 7 நபர்கள் ஒரு அணியில்- ஆண்கள் மட்டும்

7. எறிப்பந்து- 8 நபர்கள் ஒரு அணியில்- பெண்கள் மட்டும்

 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் :

(ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்)

1.தடகளம் – 100 மீ, குண்டு எறிதல் – ஆண்கள் மற்றும் பெண்கள்

2.கபாடி – 8 நபர்கள் ஒரு அணியில் – ஆண்கள் மற்றும் பெண்கள்

3.கையுந்துப்பந்து – 7 நபர்கள் ஒரு அணியில் – ஆண்கள் மற்றும் பெண்கள்

4.கேரம் – இரட்டை பிரிவு மட்டும்- ஆண்கள் மற்றும் பெண்கள்

5.கயிறு இழுத்தல் -9 நபர்கள் ஒரு அணியில் – ஆண்கள் மற்றும் பெண்கள்

6.ஸ்டீரீட் கிரிக்கெட் – 7 நபர்கள் ஒரு அணியில்- ஆண்கள் மட்டும்

7. எறிப்பந்து- 8 நபர்கள் ஒரு அணியில்- பெண்கள் மட்டும்

நேரடியாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

8. ஓவியப் போட்டி- கல்சுரல்-ஆண்கள் மற்றும் பெண்கள்

9. கோலப்போட்டி – 3 நபர்கள் ஒரு அணி- பெண்கள் மட்டும்

10. மாற்றுத்திறனாளிகள்(கை,கால் ஊனமுற்றோர்)-100 மீ-ஆண்கள் மற்றும் பெண்கள்

11. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள்- குண்டு எறிதல்-ஆண்கள் மற்றும் பெண்கள்

12. மனவளர்ச்சி குன்றியோர்- 100 மீ – ஆண்கள் மற்றும் பெண்கள்

13. செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் 100 மீ – ஆண்கள் மற்றும் பெண்கள்.

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்)

1. கபாடி – 8 நபர்கள் ஒரு அணியில் – பெண்கள் மட்டும்

2. ஸ்டீரீட் கிரிக்கெட் – 7 நபர்கள் ஒரு அணியில்- ஆண்கள் மட்டும்

பரிசுத்தொகை – ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டிகள்

தனிநபர் போட்டிகள், முதலிடம் ரூ.3000, 2 ஆம் இடம் – 2000, மூன்றாமிடம் ரூ.1000

குழுப் போட்டிகள் தலா முதலிடம் ரூ.3000, 2 ஆம் இடம்–2000, மூன்றாமிடம் ரூ.1000

பரிசுத்தொகை – மாவட்ட அளவிலான போட்டிகள்

தனிநபர் போட்டிகள் முதலிடம் ரூ.6000, 2 ஆம் இடம் – ரூ.4000, மூன்றாமிடம் ரூ. 2000

குழுப் போட்டிகள் தலா முதலிடம் ரூ.6000, 2 ஆம் இடம் – ரூ. 4000, மூன்றாமிடம் ரூ. 2000

பரிசுத்தொகை – மாநில அளவிலான போட்டிகள்

குழுப் போட்டிகள் தலா முதலிடம் ரூ.75,000, 2-ஆம் இடம்–ரூ.50,000, மூன்றாமிடம் ரூ. 25,000

எனவே முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in / https://cmyouthfestival.sdat.in –இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்திட வேண்டும். 07.01.2026 முதல் 21.01.2026-க்குள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியிலும். 7401703504 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.