Close

Sports Office – Kabir Puraskar award

Publish Date : 13/12/2025

செ.வெ.எண்:-32/2025

நாள்:-12.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

”கபீர் புரஸ்கார் விருது” பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயதப்படை வீரர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள், ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.

மேலும் இவ்விருதானது ஒரு இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற இனவகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை இதில் அடங்கும்.2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர்புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள்/ பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பிவைக்கபட வேண்டும். தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம், கொண்டும் பரசீலிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகல் 2 பிரதிகளுடன் கீழ்கண்ட முகவரியில் வருகின்ற 15.12.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்–624004 என்ற முகவரியிலும், 74017 03504 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.