ஊடக வெளியீடுகள்

Filter by:
Photo Exhibition

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

திண்டுக்கல் மாவட்டம் பழனி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமானது நாளைய தினம் (06.08.2026) ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 54KB]

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தது.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

திண்டுக்கல் மாவட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.செல்வம் அவர்கள், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் சார்பில், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]                

படங்கள் ஏதும்  இல்லை

ஆகஸ்ட் 7-ஆம் தேதி 12-வது தேசிய கைத்தறி தின விழா.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

திண்டுக்கல் மாவட்டம் 12-வது தேசிய கைத்தறி தினவிழா 07.08.2026-அன்று கைத்தறி கண்காட்சி, விற்பனை மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமானது திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]

படங்கள் ஏதும்  இல்லை

குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வருகின்ற 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72BK]

the new bus stand.

முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக, திண்டுக்கல் மேற்கு, பழனி – வத்தலக்குண்டு சர்வீஸ் சாலையில் ரூபாய் 74.89 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார். [PDF 69KB]           […]

படங்கள் ஏதும்  இல்லை

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 08.08.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 62KB]

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் 320 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்.

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் பயிற்சி முடித்த 320 பயிற்சியாளர்களுக்கு பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி, தொடங்கி வைத்தார். [PDF 69KB]                      

Tree Plantation

திண்டுக்கல் ஆட்சியர் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து மரக்கன்று நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். [PDF 78KB]