ஊடக வெளியீடுகள்
நத்தத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்.
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை மேம்பாட்டு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 63KB] […]
நியாய விலைக் கடைகளில் e-KYC சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற 02.08.2026 அன்று அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.45.43 இலட்சம் மதிப்பீட்டில் பொருளீட்டு கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். [PDF 73KB]
மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027: வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 தொடர்பாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வருகின்ற 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறவுள்ளது – திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வளர்ச்சித் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 78KB] […]
வருவாய்த்துறையின் இணையவழி சேவைகள் குறித்து முதன்மைச் செயலாளர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026திண்டுக்கல் மாவட்டம் அரசு முதன்மைச் செயலாளர் / நில சீர்திருத்த ஆணையர் டாக்டர்.ஹர் சஹய் மீனா, இ.ஆ.ப., அவர்கள் வருவாய்த்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இணையவழி சேவைகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு, வருவாய்த்துறையின் பல்வேறு நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 69KB]
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) – 2026 விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026திண்டுக்கல் மாவட்டம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) – 2026 விருது பெறுவதற்கு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வருகின்ற 31.07.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 81KB]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.07.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 50KB]
அரண் மகள் கட்டுப்பாட்டு அறை
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026திண்டுக்கல் மாவட்டம் அனைத்து வட்டாரங்களிலும் இளவயது திருமணம், இளவயது கர்ப்பம் மற்றும் பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை குறைப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென அமைக்கப்பட்டுள்ள “அரண் மகள்” கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். [PDF 68KB]