ஊடக வெளியீடுகள்
மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 15 குளங்களுக்கு மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 106KB]
ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நலச்சங்கத்தின் கீழ் புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் ஆயுஷ் திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 60KB]
மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், பெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 1,243 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, தொடங்கி வைத்தார். [PDF 54KB]
CSR நிதியின் மூலம் 600 காசநோயாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 600 காச நோயாளிகளுக்கு 3 மாதங்களுக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம் ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். [PDF 65KB]
பள்ளி மாணாக்கர்களிடையே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணாக்கர்களிடையே போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருள் எதிர்பபு மன்றங்களின் (Anti-Drug Club) செயல்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 74KB]
மாவட்ட ஆட்சித் தலைவர் கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திண்டுக்கல் மாவட்டம்: 12–வது தேசிய கைத்தறி தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 71KB]
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026திண்டுக்கல் மாவட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.செல்வம் அவர்கள், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் சார்பில், வேடசந்தூர், வடமதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தாடிக்கொம்பு, எரியோடு பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். [PDF 73KB] […]
மாவட்ட ஆட்சித் தலைவர் கள ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அவ்வளாகத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையம் ஆகியவைகளில் வருவாய்த்துறையின் சார்பில், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வுகள் மேற்கொண்டார். [PDF 63KB]
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக குறைதீர் முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 08.08.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 63KB]