ஊடக வெளியீடுகள்

Filter by:
Sweep

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – 150 இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்துக் அலுவலகம் சார்பில், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்ட இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்கள் [PDF 75KB]

படங்கள் ஏதும்  இல்லை

மதுபான சில்லறை கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003 (விதி 12(2))ன்படி உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற அனைத்து நிலையங்களும் கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் […]

DEO POL MET

மாவட்டத் தேர்தல் அதிகாரி தேர்தல் பொருட்கள் அனுப்புதலை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட தேர்தல் உபகரணங்களின் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். [PDF 64KB]

deo

மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 14 வட்டாரங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, 100% வாக்காளர் திரள்பங்கேற்பை வலியுறுத்தினர். [PDF 72KB]

DEO

வீடு தோறும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகளை வீடு, வீடாக சென்று வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 70KB]

Sweep

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” – விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026

”தித்திக்கும் தேர்தல் திருவிழா” – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 600 மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொங்கல் வைத்து, 26 ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 74KB]

படங்கள் ஏதும்  இல்லை

அஞ்சல் வாக்கு மையங்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடவிருக்கும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மான கழகம், தெற்கு ரயில்வே துறை உள்ளிட்ட 12 அத்தியாவசித் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் 19.04.2026, 20.04.2026 மற்றும் 21.04.2026 ஆகிய மூன்று நாட்கள் அஞ்சல் வாக்கு மையங்களில் (Postal Voting Centre) தங்களது வாக்குகளை செலுத்தலாம். [PDF 58.1 KB]

படங்கள் ஏதும்  இல்லை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) வேட்பாளர்களின் சின்னங்களைப் பொருத்துதல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026

எதிர் வரும் 16.04.2026 மற்றும் 17.04.2026 ஆகிய இரண்டு தினங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொறுத்தும் பணி (Canditate Setting) நடைபெறவுள்ளது. [PDF 58.1 KB]

OBSERVER

வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் நுண் பார்வையாளர்களின் இரண்டாம் கட்ட குலுக்கல் முறை ஒதுக்கீடு

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சியும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நுண் பார்வையாளர்களுக்கான (Micro Observer) இரண்டாம் கட்ட சுழற்சியும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. [PDF 72KB]