ஊடக வெளியீடுகள்
ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/04/20262026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கான நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். [PDF 88KB]
ஆட்சியருடன் ஒரு காபி: முதல்முறை வாக்காளர்களுடனான கலந்துரையாடல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/20262026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்வதற்கான நோக்கில், ‘Coffee with Collector’ எனும் தலைப்பில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. செ. சரவணன், I.A.S., அவர்கள் தலைமை தாங்கினார் [PDF 70KB]
சமத்துவ நாள் உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை (லிமிடெட்), திண்டுக்கல் மண்டலத்தின், சார்பில் பொதுமேலாளர் திரு. M.முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சமத்துவ நாள்; உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. [PDF 963KB]
மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ்கள், வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் விழிப்புணர்வு தொகுப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2026மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமானவர் இன்று (12.04.2026) வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழங்கள், அழைப்பிதழ்கள், வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் விழிப்புணர்வு தொகுப்புகள் வழங்கி, வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். [PDF 67KB]
மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (1, 2 மற்றும் 3) ஆகியோருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இயக்குதல் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமானவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 76KB]
பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 140KB]
மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் தேவையான தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் பணிகள் குறித்து இன்று (10.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். english
மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026Ahead of the Tamil Nadu Legislative Assembly General Election 2026, the District Election Officer conducted a direct inspection of a polling station falling under the 133 Vedasandur Assembly Constituency. [PDF 62KB]
மாவட்ட எல்லைகளில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாத தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். [PDF 67KB]