ஊடக வெளியீடுகள்
சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்பான தகவல்களை காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சைகை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.. [PDF 56KB]
அத்தியாவசிய பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்களால் 647 அஞ்சல் வாக்குகள் பதிவு
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவிருக்கும் அத்தியாவசிய பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோரால் இன்றைய தினம் மொத்தம் 647 அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் தெரிவித்தார். [PDF 63KB]
1,275 காவல்துறையினருக்கான சுழற்சி முறை ஒதுக்கீடு நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2301 வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல் துறையிலிருந்து பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 1275 காவலர்களுக்கு சுழற்சி முறை ஒதுக்கீடு (Police -Randamization) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை மேற்பார்வையாளர் ஆகியோர்களின் தலைமையில் இன்று (20.04.2026) நடைபெற்றது. [PDF 45KB]
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்காக முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். [PDF 68KB]
அஞ்சல் வாக்குப்பதிவு மையம் – அஞ்சல் வாக்கு விவரங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நாளான 23.04.2026 அன்று அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குக்களை செலுத்த வழிவகை செய்யும் வகையில், தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள், தேர்தல் நாளன்று பணிபுரியவிருக்கும் பணி ஆணை ஆகியவற்றுடன் தங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்களில் உள்ள அஞ்சல் வாக்கு […]
அஞ்சல் வாக்கு விபரம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் சட்டமன்ற தொகுதி வாரியாக 18.04.2026(சனிக்கிழமை) அன்று பின்வரும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நடத்தப்பட்டதில் பதிவான அஞ்சல் வாக்கு விபரம் பின்வருமாறு. [PDF 71 KB]
காவல் துறையினர் 2026 ஏப்ரல் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்கு
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவிருக்கும் காவல் துறையினர் 19.04.2026, 20.04.2026 மற்றும் 21.04.2026 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்கு மையங்களில் தங்களது வாக்கினை செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். [PDF 68KB]
பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(18.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 56KB]
தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்ணாய்வு பார்வையாளர்களின் கடமைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்ணாய்வு பார்வையாளர்களின் (Micro Observers) கடமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், பொதுப் பார்வையாளர்கள் திரு தினேஷ் ஜெயின், I.A.S., மற்றும் டாக்டர் பி.சி. சதீஷா, I.A.S. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. [PDF 66KB]