Close

Seizure Details Released by Flying Squads and SST Teams.

Publish Date : 18/03/2026

செ.வெ.எண்: 58/2026

நாள்: 18.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election)
(15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாகனங்களை சோதனை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(17.03.2026)
132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) ரூ.3,01,210/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 133-வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினரால் (FST) ரூ.3,00,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட தொகை முழுவதும் சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் கருவூலத்தில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.