TAMIL NADU STATE RURAL LIVELIHOODS MISSION – TNSRLM – Honey Cultivation
செ.வெ.எண்:-29/2025
நாள்:-13.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் மற்றும் செந்துறை வட்டங்களை சேர்ந்த சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் தேனி வளர்ப்பு பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நத்தம் மற்றும் செந்துறை வட்டங்களை சேர்ந்த சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டிலான தேனி வளர்ப்பு பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(13.01.2025) வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் தேனி வளர்ப்பு தொகுப்பு திட்டத்தின்கீழ் இரண்டு வட்டாராத்தில் தேனி வளர்ப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நத்தம் வட்டம், செந்துறை, வடமதுரை வட்டம், கொம்பேறிபட்டி கிராமத்தில் தேனி வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு, ஒரு வட்டாரத்திற்கு 20 சுய உதவிப் பெண்கள் வீதம் இரண்டு வட்டாரத்திற்கு 40 பெண்களை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு தேனி தொகுப்பிற்கு சுழல் நிதியாக ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. தேனி வளர்ப்பு தொகுப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு நபருக்கு 5 தேனி பெட்டிகள் வீதம் 40 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 200 தேனி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. கிராம பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு இத்திட்டம் முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, மாவட்ட வள பயிற்றுனர் திரு.எஸ்.குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.