TH Food and Civil Supply Minister – Drugs Awareness Rally

செ.வெ.எண்:-49/2025
நாள்:-24.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று(24.01. 2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
அதன்படி, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன், என அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தாராபுரம் சாலையில் காமாட்சி திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், “போதையில் ஆடாதே பாதியிலே போகாதே, கள்ளச்சாராயம் அருந்தாதே கண்ணை இழக்காதே, போதைப்பொருள்களை ஒழிப்போம், மனித மாண்பைக் காப்போம், அழிப்போம் அழிப்போம் போதை மருந்துகள் பழக்கத்தை அழிப்போம்“ போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்தப் பேரணியில், பழனி சார் ஆட்சியர் திரு.சீ.கிஷன்குமார், இ.ஆ.ப., உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, நகராட்சி ஆணையாளர் திருமதி சுவேதா, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், துணை காவல் கண்காணிப்பாளர்(கலால்) திரு.முருகன், வட்டாட்சியர்(கலால்) திரு.வடிவேல்முருகன், முக்கிய பிரமுகர்கள் திரு.ப.வெள்ளைச்சாமி, திரு.வீ.கண்ணன், திரு.எஸ்.ஆர்.கே.பாலு, திரு.ஆறுமுகம், காவல் துறையினர், 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.