The District Collector personally visited and inspected the development project works currently being carried out in the areas under the Kodaikanal and Ottanchathiram Panchayat Unions
செ.வெ.எண்: 47/2026
நாள்: 14.03.2026
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், அடுக்கம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்மலை பழனி சாலை சந்திப்பில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் மற்றும் கழிப்பறையை, கிராமப்புற கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியினையும், வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட பெரும்பள்ளத்தில் 15-வது மத்திய நிதிக்குழு (2025-2026)-ன்கீழ், ரூ.150.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமானப் பணியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட கோம்பைக்காடு முதல் செம்பிரான்குளம் வரை உள்ள சாலையினை நபார்டு XXX (2024-2025) திட்டத்தின் கீழ், ரூ.105.74 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலை மேம்பாட்டுப் பணியினை துரிதமாக மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பாச்சலூர் ஊராட்சியில், பாச்சலூர் முதல் செம்பிரான்குளம் வரை (கடைசிக்காடு வழியாக) சாலையினை ‘மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவி – உலகளாவிய அளவிலான புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை மேம்படுத்துதல்’ (SASCI) திட்டத்தின் கீழ், ரூ.252.32 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பாச்சலூர் ஊராட்சிக்குட்பட்ட நடனன்கால்வாய் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 32 பயனாளிகளுக்கு ரூ.112.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்ப
ட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் வீடுகளையும் மற்றும் பாச்சலூர் ஊராட்சிக்குட்பட்ட புலனன்கால்வாய் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 18 பயனாளிகளுக்கு ரூ.63.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் வீடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பூலத்தூர் ஊராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழு (2025-2026)-ன்கீழ், ரூ.150.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணியினையும் மற்றும் பூலத்தூர் ஊராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழு (2025-2026)-ன்கீழ், ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுகாதார துணை நிலையம் கட்டுமானப் பணியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பிரான்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வாக்குச்சாவடி எண்.245), செம்பிரான்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வாக்குச்சாவடி எண்கள்.246, 247) மற்றும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பரப்பலாறு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026-ஐ முன்னிட்டு தேர்தல் வாக்குசாவடி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்துப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பால்கடை மற்றும் கோமாளிப்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)ன்கீழ், தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரணி, செயற்பொறியாளர் திரு.சக்தி முருகன், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சாமிநாதன், திரு.பிரபா ராஜமாணிக்கம், உதவிப் பொறியாளர் திரு.சசிகுமார், பணி மேற்பார்வையாளர் திரு.பாரதி அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.