The District Collector released the final voter list.
செ.வெ.எண்:-57/2026
நாள்: 23.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.02.2026) வெளியிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத்திருத்தம்-2026-க்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று (23.02.2026) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2,301 வாக்குச் சாவடிகள், 8,12,937 ஆண் வாக்காளர்கள், 8,58,964 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 174 என மொத்தம் 16,72,075 வாக்காளர்கள் உள்ளனர்.
அதன்படி, 127-பழனி சட்டமன்ற தொகுதியில் 339 வாக்குச்சாவடிகள், 1,15,728 ஆண் வாக்காளர்கள், 1,21,582 பெண் வாக்காளர்கள், 49 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,359 வாக்காளர்களும், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், 1,04,519 ஆண் வாக்காளர்கள், 1,13,177 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,17,698 வாக்காளர்களும், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 341 வாக்குச்சாவடிகளும், 1,25,056 ஆண் வாக்காளர்கள், 1,34,773 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,59,846 வாக்காளர்களும், 130-நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடிகளும், 1,07,389 ஆண் வாக்காளர்கள், 1,11,673 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,19,077 வாக்காளர்கள், 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 359 வாக்குச்சாவடிகளும், 1,27,116 ஆண் வாக்காளர்கள், 1,31,421 பெண் வாக்காளர்கள், 66 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,58,603 வாக்காளர்கள், 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச்சாவடிகளும், 1,14,893 ஆண் வாக்காளர்கள், 1,22,765
பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,679 வாக்காளர்கள், 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகளும், 1,18,236 ஆண் வாக்காளர்கள், 1,23,573 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,41,813 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகள், 8,12,937 ஆண் வாக்காளர்கள், 8,58,964 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 174 என மொத்தம் 16,72,075 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை சரிபார்த்துக்கொள்ளும் பொருட்டு இறுதி வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி அவர்கள் ஆகியோர் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.