Close

The Hon’ble CM AND DEPUTY CM – KMUT Scheme Second Phase

Publish Date : 13/12/2025
.

செ.வெ.எண்:-35/2025

நாள்:-12.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.

தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர், திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, 61,716 மாதரசிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையைில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து மாதரசிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023-அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 59,837 பயனாளிகளுக்கும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 47,898 பயனாளிகளுக்கும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 54,873 பயனாளிகளுக்கும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 67,657 பயனாளிகளுக்கும்,

பழனி சட்டமன்ற தொகுதியில் 57,794 பயனாளிகளுக்கும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 50,457 பயனாளிகளுக்கும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 61,917 பயனாளிகளுக்கும் என மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 4,00,433 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்
2-ஆவது கட்ட விரிவாக்கத்தை இன்று (12.12.2025) தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட 4,216 பயனாளிகளுக்கும், திண்டுக்கல் கிழக்கு வட்டத்திற்குட்பட்ட 9,290 பயனாளிகளுக்கும், திண்டுக்கல் மேற்கு வட்டத்திற்குட்பட்ட 9,074 பயனாளிகளுக்கும், குஜிலியம்பாறை வட்டத்திற்குட்பட்ட 3,205 பயனாளிகளுக்கும், கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட 2,755 பயனாளிகளுக்கும், நத்தம் வட்டத்திற்குட்பட்ட 4,192 பயனாளிகளுக்கும், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 7,653 பயனாளிகளுக்கும், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட 6,596 பயனாளிகளுக்கும், பழனி வட்டத்திற்குட்பட்ட 8,790 பயனாளிகளுக்கும், வேடசந்தூர் வட்டத்திற்குட்பட்ட 5,945 பயனாளிகளுக்கும் என மொத்தம் 10 வட்டங்களைச் சேர்ந்த 61,716 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் பொறுப்பேற்ற பின்பு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தபடாத திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தகுதியான மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டுமென்று உறுதியாக உள்ள ஒரே முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான். ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1.16 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே பெண்களுக்கு விடியல் பயணம் திட்டத்தை கொண்டு வந்து நகர பேருந்தில் சென்றால் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டி நிதி வழங்காவிட்டாலும் அதை பொருப்படுத்தாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமைத்தெகை வழங்கும் திட்டம். விடியல் பயணம் உட்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர்களின் கொள்கையை ஏற்று பெண்களுக்கு சொத்தில் சமஉரிமையை 1919-ஆம் ஆண்டு கொண்டு வந்தார். 10-ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம், மேலும், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே பெண்களுக்கு விடியல் பயணம் திட்டத்தை கொண்டு வந்து நகர பேருந்தில் சென்றால் கட்டணமில்ல பேருந்து பயணம் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மகளிர் விடியல் பயணத்திட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் கொண்டு வந்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023-அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் 1.16 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இரண்டாவது கட்டமாக இன்று(12.12.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்

குறிப்பாக இந்த அரசு போறுப்பேற்ற பின்பு பெண்கள் முன்னெற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள்செல்படுத்தப்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது இது போன்று பெண்கள் முன்னேற்றத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார். மேலும், சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகையை பொருத்தவரையில் ஏற்கனவே 4,00,433 பயனாளிகளும், தொடர்ந்து இன்று முதல் 61,716 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (பொ) திரு.ம.செல்வன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.