Close

The Hon’ble CM Arrival – Meeting

Publish Date : 22/12/2025
.

செ.வெ.எண்:-54/2025

நாள்:-20.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைபுரிவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 07.01.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பதற்கும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்கும் வருகைபுரிய திட்டமிடப்பட்டுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (20.12.2025) அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், மதிப்பிற்குரிய பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள், மதிப்பிற்குரிய வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்தி ராஜன் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொதுமக்களின் நலனில் அக்கறை கெண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்கள். மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்றி வருகிறார்கள்.

அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வருகின்ற 07.01.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். மேலும், திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட வேண்டிய முடிவுற்ற திட்டப்பணிகள் பட்டியல், அடிக்கல் நாட்டப்பட வேண்டிய ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய திட்டப்பணிகளின் பட்டியல் ஆகியவற்றை தயார் செய்யும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.3.00 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை வழங்க உள்ளார்கள். இதனை கருத்திற்கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக புத்தாக்கத்திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் விபரம் மற்றும் பயனாளிகள் பட்டியல் ஆகியவற்றை விரைந்து தாயாரித்து பணிகளை முடிக்க வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

மேலும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக பொதுமக்கள் நலத்திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏதாவதொரு வகையில் திட்டங்களை செயல்படுத்தி அத்திட்டங்களின் வாயிலாக பொதுமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கில் செயலாற்றி வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பது குறித்து அந்தந்த துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வருகின்ற 07.01.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். மேலும், திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட வேண்டிய முடிவுற்ற திட்டப்பணிகள் பட்டியல், அடிக்கல் நாட்டப்பட வேண்டிய ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் பட்டியல் ஆகியவற்றை தயார் செய்யும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக புத்தாக்கத்திட்டம். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் விபரம் மற்றும் பயனாளிகள் பட்டியல் ஆகியவற்றை விரைந்து தயார் செய்து முடிப்பதற்கு அந்தந்த துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பெ.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மூ.திருமலை, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.திருநாவுகரசு, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன் அவர்கள் ஆகியோர் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

Oplus_16908288