The Hon’ble Food and Civil Supplies Minister, Mr. R. Sakkarapani, inaugurated the breakfast scheme for sanitation workers.
செ.வெ.எண்:-22/2026
நாள்:-09.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் இன்று (09.02.2026) நகராட்சிகள்இ நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் காமாட்சி மஹாலில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் இன்று (09.02.2026) நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் காமாட்சி மஹாலில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலன் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2007-ஆம் ஆண்டு “தூய்மை பணியாளர் நல வாரியம்” அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி. கல்வி உதவித்தொகை. திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி. கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம். வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், “தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, 09.12.2022 அன்று இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது இத்திட்டத்தின் மூலமாக தூய்மைப் பணியாளர்களுக்கு. நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி, பாதுகாப்பு உபகரணம் வழங்குதல், சுகாதாரக் காப்பீடு. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தொடர் உடல்நல பரிசோதனைகள் மற்றும் மாற்று வாழ்வாதார நடவடிக்கைகள் ஆகியன தடையின்றி பெறுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. மேலும்இ இத்திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு திறன் மேம்படுத்துதல். மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தி 14.08.2025 அன்று தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம், தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டம். பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம். தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகை ஆகிய 6 புதிய சிறப்புத் திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு. தற்போது அத்திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 158 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சுவேதா அவர்கள்இ ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சய்காந்தி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.