The Hon’ble Minister for Food and Civil Supplies, Mr. R. Sakkarapani,laid the foundation stone for the new project works.
செ.வெ.எண்:-30/2026
நாள்:-11.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (11.02.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும், ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
மேலும், படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 துவக்கி வைத்தார்கள். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு வழங்கினார்கள். தற்போதுஇ இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 63 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகளை 13.02.2026-ஆம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி வார்டு எண்-3ல், ஏற்கனவே சேதமடைந்த பேவர் பிளாக் சாலைகளை சீரமைக்க ரூ.47.00 இலட்சம் மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. முமு நகர் பகுதி மக்களின் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதியில் தேங்கியது. எனவேஇ சுகாதாரக்கேடு ஏற்படா வண்ணம் உடனடியாக முமு நகர் பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் வெளியேறும் வகையில் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. நெடுநாள் கோரிக்கையான சுளுP நகர் பிரதான சாலை அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைக்காலங்களில் வசந்த நகர் பகுதி மக்களுக்கு ஏற்படும் வெள்ள சேதங்களை தடுக்கும் பொருட்டு, சின்னக்குளம் மறுகால் முதல் பொன்னகரம் குளம் வரை சிமெண்ட் தளத்துடன் கூடிய மழைநீர் ஓடை அமைக்கும் பணிக்கு ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவக்கி வைக்கப்படும். RSP நகரில் வசித்து வரும் பொதுமக்கள் 84 நபர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி வார்டு எண்-1ல், விநாயகர் கோவில் கிழக்கு பகுதி பொதுமக்களின் நெடுநாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பொன்னகரம் குடியருப்பு பொதுமக்களின் கேரிக்கையின்படி மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடவடிக்கையில் உள்ளது. கூடலிங்கபுரம் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சொந்த முயற்சியில் நிலம் பெறப்பட்டு பொதுக் கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கூடலிங்கபுரத்தில் வசித்து வரும் பொதுமக்கள் 16 நபர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி, வார்டு எண்.6-ல், ஏ.பி.பி நகர் விரிவாக்க பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் நல்லமுறையில் செய்து முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஏ.பி.பி நகர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக புதிய காவிரி கூட்டு குடிநீர திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 5.6 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வார்டு எண்6-ல் சண்முகவேல்புரத்தில் வசித்து வரும் பொதுமக்கள் 5 நபர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. 
ஒட்டன்சத்திரம் நகராட்சி, வார்டு எண்.7-ல், ஏற்கனவே சேதமடைந்த தார் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் சீரமைக்க ரூ. 3.6 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தும்மிச்சம்பட்டி புதூர் பகுதியில் உள்ள நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடங்கள் ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கன்னிமார் கோவில் பகுதி மக்களின் கோரிக்கையின்படி, சிறுமின் விசைப்பம்பு அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தும்மிச்சம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஆரம்ப அரசு சுகாதார நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாயக்கனூர் பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படவுள்ளது. தும்மிச்சம்பட்டி புதூர் முதல் மின்மயானம் குளம் வரை மழைநீர் ஓடை ரூ3.65 கோடி மதிப்பீட்டில் அமைக்க நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-3ல் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணி,வார்டு எண்-1ல் ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணி, வார்டு எண்.6-ல் ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணி, வார்டு எண்.7-ல் ரூ.38.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணி உட்பட மொத்தம் ரூ.2.02 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி வார்டு எண்-4ல், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி, வார்டு எண்.6-ல், ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மலக்கசடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 07.01.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஒருங்கிணைந்த மலக்கசடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு குறித்து மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் திருமதி.சுவேதா, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பொறியாளர் திரு.ம.சுப்பிரமணிய பிரபு, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திரு.திருமலைசாமி, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற துணைத் தலைவர் திரு.வெள்ளைசாமி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.





