The Hon’ble Minister for Food and Civil Supplies, Mr. R. Sakkarapani,laid the foundation stone for the new project works.
செ.வெ.எண்:-36/2026
நாள்:-13.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.61.00 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.6.73 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.61.00 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.6.73 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (13.02.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில், 128 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கடந்த 05.01.2026-அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில இறுதி ஆண்டு பயிலும் 2,321 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மடிக்கணிணிகள் வழங்கும் விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இன்றைய தினம் ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மடிக்கணிணிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 39 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, வாகரை, கீரனூர், எரம்மநாயக்கன்பட்டி, வடகாடு, அம்பிளிகை உள்ளிட்ட 13 ஊராட்சிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும்இ ஆணை பிறப்பித்துள்ளார்கள். தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அடிப்படைத் தேவைகளான சாலை வசதிகளை ரூ.1088 கோடி நிதியொதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 17.02.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 துவக்கி வைத்தார்கள். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு வழங்கினார்கள். தற்போது, இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 63 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றிலிருந்து தண்ணீரை அரவக்குறிச்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு கொண்டு வந்து சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வாகரை, கொழுமங்கொண்டான் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகளை இன்றைய தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வாகரை ஊராட்சிக்குட்பட்ட பூசாரிகவுண்டன்வலசில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2023-2024)-ன்கீழ்இ ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானியக் கிட்டங்கியையும், பொருளூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பாயிவலசு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2024-2025)-ன்கீழ், ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானியக் கிட்டங்கியையும், பொருளூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும், பொருளூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அருகில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2024-2025)-ன்கீழ்இ ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானியக் கிட்டங்கியையும், பொருளூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2024-2025)-ன்கீழ்இ ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தையும், பொருளூர் ஊராட்சியில் குருவப்பநாயக்கன் வலசு முதல் ஆலாமரத்துப்பட்டி வரை ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நல்லதங்காள் ஆற்று பாலத்தையும் என மொத்தம் ரூ.6.73 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வாகரை ஊராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திட்டத்தின் கீழ், ரூ.61.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கும் பணிக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உணவு தானியக் கிட்டங்கிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு குடிமைப்பொருட்கள் மற்றும் குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில்,பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பழனி சரகம்) திரு.செந்தில்வேல் பாண்டியன், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.தாஹிரா, திரு.குமரன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.