The Hon’ble Minister for Food and Civil Supplies, Mr. R. Sakkarapani,(Vadakadu) laid the foundation stone for the new project works.
செ.வெ.எண்:-29/2026
நாள்:-10.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (10.02.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
![]() |
![]() |
![]() |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விலை கிடைக்காத நேரத்தில் சேமித்து வைக்க ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரத்தில் குளிர் சாதன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மூலமாக ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கேதையறும்பில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. முருங்கை உற்பத்தியை ஊக்குவிக்கும் வண்ணமாக முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒட்டன்சத்திரம் தொகுதியில் மார்க்கம்பட்டியில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலைமச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். விவசாயிகள், அரசு அலுவலர்கள், பெண்கள், மாணவ, மாணவியர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
வடகாடு ஊராட்சி பொதுமக்கள் வழங்கிய நல்ல ஆதரவின் காரணமாக ரூ.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பரப்பாலாறு அணை தூர்வார மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும், பரப்பலாறு, விருப்பாட்சி தலைக்குத்து அருவி, நங்காஞ்சியாறு அணை ஆகிய பகுதிகளை சுற்றுலா தளமாக உருவாக்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பிரித்து புதிய கூட்டுறவு கடன் சங்கங்களை உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாகரை, கீரனூர், கொழுமங்கொண்டான், எரமநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 12 புதிய வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வடகாடு பகுதி மக்கள் மலைப்பகுதியில் வசிப்பதால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர நாங்கள் தயாராக இருக்கின்றோம். இப்பகுதியில் மக்களின் தேவை, எண்ணங்கள், நம்பிக்கை, கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சிக்குட்பட்ட வடகாட்டில் ரூ.16.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், கோமாளிபட்டியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும், பால்கடையில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும் மற்றும் பால்கடையில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும், கோட்டைவெளியில் ரூ.15.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினையும், பெத்தேல்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தையும், பெத்தேல்புரத்தில் ரூ.17.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் மற்றும் பெத்தேல்புரத்தில் ரூ.15.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினையும், கும்மளாமரத்துப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலைக் கடையினையும் என மொத்தம் ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சிக்குட்பட்ட மாட்டுப்பட்டிக்காட்டில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி, சங்கர் வீடு முதல் ரமேஷ் வீடு வரை ரூ.4.89 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி, அம்சவேணி வீடு முதல் கணேசன் வீடு வரை ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி, கோமாளிபட்டி வடக்கு பகுதியில் உள்ள ஆழ்துளைக்கிணறு மின் மோட்டார் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் பொருத்தி பைப்லைன் அமைக்கும் பணி, கோமாளிபட்டி வடக்கு பகுதியில் உள்ள ஆழ்துளைக்கிணறு மின் மோட்டார் ரூ.3.67 இலட்சம் மதிப்பீட்டில் பொருத்தி பைப்லைன் அமைக்கும் பணி, கோமாளிபட்டி காவேரி வீடு முதல் பழனியம்மாள் வீடு வரை ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, வடகாடு ஊராட்சி அங்கன்வாடி அருகில் ரூ.1.67 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சிமெண்ட் சிலாப் அமைக்கும் பணி, வடகாடு வள்ளி வீடு முதல் பாலம் வரை ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, வடகாடு ரமேஷ் வீடு முதல் ஆரம்பப்பள்ளி வரை ரூ.5.54 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கும்மளாமரத்துப்பட்டி அங்கன்வாடி முதல் சமுதாயக்கூடம் மற்றும் கட்டையன் வீடு வரை ரூ.7.93 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மேட்டுப்பட்டி – கண்ணனூர் சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து காரியசாமி கோவில் வரை ரூ.98.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்தும் பணி, மேட்டுப்பட்டி – மாஞ்சோலை இடையே ரூ.97.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்தும் பணிஇவடகாடு ஊராட்சியில் ரூ.56.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.3.20 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சய்காந்தி, மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.


