Close

The Hon’ble Rural Development Minister Program

Publish Date : 16/07/2024
.

செ.வெ.எண்:-35/2024

நாள்:13.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 13.00 கோடி மதிப்பீட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.13.00 கோடி மதிப்பீட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ர.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் இன்று(13.07.2024) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்கள். தொடர்ந்து, கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பின்தங்கிய பகுதி என்பதால் கல்லூரி அமைப்பது மக்களுக்கு அவசியமாகிறது. கல்லூரி அமைப்பதன் மூலம் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. இக்கல்லூரியான தற்காலிக கட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 07.07.2022 முதல் இயங்கி வருகிறது. அரசு கல்லூரி அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.13.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கல்லூரியானது 3 தளங்களுடன் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பேரராசியர்கள் அறைகள், முதல்வர் அறைகள், கூட்டரங்குகள், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மாணவர்கள் உயர்தரமான கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகளுக்கு காது கொடுத்து கேட்டு, அதை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பதற்காக மக்களுடன் முதல்வர் என்ற சிறப்புத்திட்டத்தினை ஊரக பகுதிகளில் 10.07.2024 அன்று துவக்கி வைத்தார்கள். இதன் மூலம் ஏராளமான பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்த்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசின் சார்பில் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படுகிறது. இது மக்களுக்கான அரசு, மக்களுக்காக செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் அதரவுடன் இருந்து வருகிற ரார்கள் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமதி த.ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு ஊறுப்பினர் திருமதி ச.சுப்புலெட்சுமி, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி சண்முகம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவர் திருமதி ஷகிலா ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திரு.திருப்பதி, திருமதி காளிஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலச்சத்திரம் திருமதி வி.லெட்சுமி, கொத்தப்புள்ளி திருமதி.சுந்தரி அன்பரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.