The Hon’ble Rural Development Minister – Ration Shop Inauguration
செ.வெ.எண்:-23/2025
நாள்: 11.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, வீரக்கல் ஊராட்சிக்குட்பட்ட கள்நாட்டான்பட்டி, சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட நெசவாளர் காலனி, அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்ட அமலிநகர் மற்றும் பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட மாதா நகர் உள்ளிட்ட 4 ஊராட்சிப் பகுதிகளில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, வீரக்கல் ஊராட்சிக்குட்பட்ட கள்நாட்டான்பட்டி, சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட நெசவாளர் காலனி, அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்ட அமலிநகர் மற்றும் பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட மாதா நகர் உள்ளிட்ட 4 ஊராட்சிப் பகுதிகளில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை இன்று(11.12.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விடுபட்ட நபர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நாளை (12.12.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான நபர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் மூலம் மக்களுக்காக மக்களைத் தேடி சென்று பல்வேறு திட்டங்ளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்கள். மேலும், கிராமப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பாதாள சாக்கடை வசதி, குடி தண்ணீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குபட்ட பல்வேறு பகுதிகளுக்கு சாலை வசதிகளை மேம்படுத்தி புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1,500 ரேசன் அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக்கடை என்ற விகிதத்தில் நியாய விலைக்கடைகள் இருந்தன. தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 100 ரேசன் அட்டைகளுக்கு ஒரு பகுதி நேர நியாய விலைக் கடையினை உருவாக்கி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும், கிராமப் பகுதிகளில் வீடுகள் இடைவெளி விட்டு அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்கத்து வீட்டிற்கு செல்வதற்கு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை கருத்திற்கொண்டு தெருவிளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். அதேபோல, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீராகவ் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. மொ.கு.அன்பழகன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.