The honorable Rural Development Minister – Development works inauguration
செ.வெ.எண்:-39/2026
நாள்:14.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆசாரிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.34.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் மற்றும் நவாமரத்துப்பட்டியில் ரூ.63.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும் குருநாதநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மன்னார்கோட்டையில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தையும் கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட பொம்மனங்கோட்டையில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும் மற்றும் கதிரணம்பட்டியில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆசாரிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.34.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் மற்றும் நவாமரத்துப்பட்டியில் ரூ.63.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும், குருநாதநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மன்னார்கோட்டையில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தையும், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட பொம்மனங்கோட்டையில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும் மற்றும் கதிரணம்பட்டியில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (14.02.2026) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியினையும், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளி, கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகங்கள் கட்டுவதற்கும், பழுதடைந்த கட்டடங்ளை சீர்செய்யும் பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும் வருகிறார்கள்.
![]() |
![]() |
![]() |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்இ ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முருங்கைப்பட்டி ஊராட்சியில் 90 கலைஞர் கனவு இல்லம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக 17 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 இலட்சத்து 62 ஆயிரம் நபர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் ரூபாய் 5,000 பற்று வைக்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் அனைத்து பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகையினை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஒப்புதலின்படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், ஆத்தூரில் ஒரு கூட்டுறவு கலைக் கல்லூரி மற்றும் ரெட்டியார்சத்திரத்தில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த
04.02.2026-அன்று ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 9,809 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான முதியோர் உதவித்தொகை மற்றும் ஏனைய சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 2,000 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. பெ.திலகவதி, திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மலரவன், திரு.கண்ணன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.


