The honorable Rural Development Minister – Development works inauguration
செ.வெ.எண்: 40/2026
நாள்: 15.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள்,ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம், பலக்கனூத்து, புதுச்சத்திரம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.77.74 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம், பலக்கனூத்து, புதுச்சத்திரம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.77.74 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(15.02.2026) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில்இ மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி எல்லைப்பட்டியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், பலக்கனூத்து ஊராட்சி நரிப்பட்டியில் ரூ.9.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், பலக்கனூத்து ஊராட்சியில் ரூ.9.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், புதுஎட்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், புதுச்சத்திரம் ஊராட்சியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது சேவை மையம் கட்டடம், ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டடம் என மொத்தம் ரூ.77.74 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக 17 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் மூன்று மாதங்களுக்கு ரூ.3,000-மும் மற்றும் இடைப்பட்ட காலத்திற்கு செலவிற்காக ரூ.2,000-மும் சேர்த்து மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5,000 பற்று வைக்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் அனைத்து பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தற்போது விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. இனிவரும் காலங்களில் மகளிர் உரிமைத் தொகையினை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தினை மேலும், விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொங்கல் பண்டிகையின் போது, ரூ.3000-மும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-மும் என ரூ.4000 வழங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ரூ.9,000 தமிழ்நாடு அரசு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
![]() |
![]() |
![]() |
இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தேர்தலுக்கு பின்னர் இத்திட்டத்தினை செம்மைப்படுத்துவது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாடு பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்று வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்இ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தகுதியான நபர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில்இ திண்டுக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. பெ.திலகவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீ ராகவ் பாலாஜி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மலரவன், திரு.கண்ணன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.


