The District Collector opened the Kalaignar dream homes for the use of the beneficiaries.
செ.வெ.எண்:70/2026
நாள்: 25.02.2026
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.49.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 கலைஞரின் கனவு இல்லம் வீடுகளை பயனாளிகளின் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.49.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 கலைஞரின் கனவு இல்லம் வீடுகளை பயனாளிகளின் பயன்பாட்டிற்கு இன்று (25.02.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்துள்ளார்கள். 
அதனடிப்படையில், இன்றைய தினம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.49.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 கலைஞரின் கனவு இல்லம் வீடுகளை பயனாளிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொதுநிதி (வட்டார ஊராட்சி) திட்டம் (2025-2026)-ன்கீழ், நரிக்குறவர் காலனியில் நதியா வீடு முதல் நிரோஷா வீடு வரை (120 மீட்டர்) ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சுரேஷ் வீடு முதல் சூரிய வீடு வரை (60 மீட்டர்) ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஈஸ்வரி வீடு முதல் தங்கம்பிள்ளை வீடு வரை (60 மீட்டர்) ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும் வண்ணக்கல் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும், நரிக்குறவர் காலனியில் பொதுநிதி (வட்டார ஊராட்சி) திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (10000 லிட்டர் கொள்ளளவு) அமைக்கப்பட்டு 15 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நரிக்குறவர் காலனியில் பொதுநிதி (வட்டார ஊராட்சி) திட்டம் (2025-2026)-ன்கீழ், 13 மின்கம்பங்கள் ரூ.2.08 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் 20 தெருவிளக்குகள் ரூ.9500 மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்கள். எனவே, மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில, வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சீதாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) திரு.சரவணன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.