Close

“Thiranakam” Special District Skill Centers were inaugurated via video conferencing.

Publish Date : 04/03/2026

செ.வெ.எண்:-08/2026

நாள்:-03.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை, பசுமை வழிச் சாலை, முகாம் அலுவலகம் ‘குறிஞ்சி இல்லத்தில்’ இன்று(03.03.2026) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 23 மாவட்டங்களில் “திறனகம்” சிறப்பு மாவட்ட திறன் மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அமைந்துள்ள திறனகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை, பசுமை வழிச் சாலை, முகாம் அலுவலகம் ‘குறிஞ்சி இல்லத்தில்’ இன்று(03.03.2026) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 23 மாவட்டங்களில் “திறனகம்” சிறப்பு மாவட்ட திறன் மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அமைந்துள்ள திறனகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் முயற்சியை முன்னெடுத்து, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் பிரத்யேக மாவட்ட திறன் அலுவலகம் (திறனகம்) காணொலி காட்சி வாயிலாயக தொடங்கி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மாவட்ட திட்ட மேலாண்மை அலகு அறையில் (District Project Management Unit Room) திறனகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட திறன் மையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி ரூ.5,28,194/- மதிப்பீட்டில் மேற்கொள்ளவதற்கு திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்களுக்கு நிர்வாகி அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் வருகை – “திண்டுக்கல் வெற்றி நிச்சயம்” பயனாளிகள் பணிநியமனம் பற்றிய உரை, தொழில் வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், திறன் பயிற்சி வகுப்புகள் ஆய்வு, கற்றல் இடை நிற்றல் மாணவவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கண்காணிப்பு, மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு விழிப்புணர்வு, காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஆகிய செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களை கொண்டுள்ளது.        .

திண்டுக்கல் மாவட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் வெற்றி நிச்சயம் நான் முதல்வன் திட்டங்கள் வாயிலாக 1,11,095 திறன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 2024-2025 அறிவிப்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் “திறனகம்” எனும் சிறப்பு மாவட்ட திறன் மையங்களை நிறுவியுள்ளது. இம்மையங்கள், இளைஞர்களின் தொழில் விருப்பங்களை தொழில்துறை தேவைகளுக்குகேற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து, நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பைப் பெற வழிகாட்டும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த மையங்களாக செயல்படுகின்றன.

ஒவ்வொரு திறனகமும் ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல். திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படுகிறது. இம்மையங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டலில் மாவட்ட திறன் அலுவலர்களால் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் (TNSDC) ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகின்றன. மாவட்ட தலைமையகங்களில் கணினி வசதி, குளிர்சாதன வசதி. உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் திட்டமாகும்.இத்திட்டம் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ITI மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள். தொழில்நுட்ப நிபுணர்கள். வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த திறன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 2025-2026 ஆண்டு அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 மாநில கலை மற்றும் அறிவியல் மற்றும் ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நான் முதல்வனுக்காக பல்கலைக்கழக “செயல்பாட்டு மையங்கள்” ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவித்தார்கள்.

இந்த நான் முதல்வன் பல்கலைக் கழக செயல்பாட்டு மையங்கள் முதல்வன் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும். கண்காணிக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் (NMUOC) ஒரு Nodal Centre ஆக செயல்படும் தொழில் துறைக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பாடப்பிரிவுகளைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களோடு இந்த மையங்கள் ஒருங்கிணைக்கும். மாணவர்களுக்கு Internship. மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க இந்த மையங்கள் உதவும். மாணவர் சேர்க்கை. திறன் சான்றிதழ் பெறுதல் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களைக் கண்காணிக்க இந்த மையங்கள் உதவும்.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 11 அரசு பல்கலைக் கழகங்களில் (அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் 10 கலை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகங்கள்) நான் முதல்வன் பல்கலைக் கழக செயல்பாட்டு மையங்கள் (Naan Mudhalvan University Operational Cell) ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் இன்று(03.03.2026) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் மூலம் இளைஞர்களின் திறன் மேம்பாடு மூலம் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் அரசின் உறுதியான நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) மதுரை திருமதி திருமலைச்செல்வி, உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) திண்டுக்கல் திரு.அருண் நேரு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.ராப்சன் டேவிட், மாவட்ட திறன் அலுவலர் திருமதி பவித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.