TNSKILL International.
செ.வெ.எண்:-28/2026
நாள்:-06.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
அயலக பணிக்கு செல்ல விருப்பமுள்ளவர்களை பாதுகாப்பாகவும் திறனை மேம்படுத்தியும் தகுந்த பணிக்கு செல்லவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் TNSKILL International என்னும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் மூலம் துபாய், குவைத், மாலத்தீவு, பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.அதன்படி துபாய், கத்தார், குவைத் ஆகிய நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷோபா கட்டுமான நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு ITI / டிப்ளமோ படித்த இளைஞர்கள் கீழ்கண்ட பணியிடங்களுக்கு தேவைப்படுகின்றனர். முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறும் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்திட்டம் மூலம் குறுகிய கால பயிற்சி அளித்து வெளிநாட்டு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதன்படி திண்டுக்கல் நத்தம் ரோடு, குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 9-ஆம் தேதி நடைபெறும் அப்ரண்டிஷிப் மேளாவில் இதற்கான நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ITI Trade List: Electrician, AC Mechanic, Joinery Carpenter, Electrician Helper, Mason (Block / Tile / Marble / Plaster), Scaffolder, Steel Fixer, Aluminium Semi Fitter, Helper, Joinery Carpenter, Aluminium Fitter.
சம்பளம்: ரூ.34,750/-முதல் பணி அனுபவத்தின் அடிப்படையில் ரூ.55,000/- வரை.
Diploma Trade List: Diploma in Civil Engineering, BE Civil Engineering
சம்பளம்:ரூ.1,20,000/- முதல் பணி அனுபவத்தின் அடிப்படையில் ரூ.1,44,000/- வரை.
இந்த நிறுவனத்தின் சார்பில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் விசா வழங்கப்படும்.
Staff Category:Admin Staff and Male Nurse – (Dubai)
சம்பளம்:ரூ.1,20,000/- முதல் பணி அனுபவத்தின் அடிப்படையில் ரூ.1,44,000/- வரை.
B.Sc. Nursing – (Bhutan) சம்பளம்: ரூ.65,000/- முதல் பணி அனுபவத்தின் அடிப்படையில் ரூ.85,000/- வரை + Allowances ரூ.15,000/-.
மேலும், விபரங்களுக்கு 8925805404. 8925805403, 8925805405 ஆகிய கைபேசி எண்களையும், மின்னஞ்சல்: tnskillintl@tnsdc.in, இடம்; Govt. ITI, Dindigul District. தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.