Close

Tree Plantation – Green Tamil Nadu Mission

Publish Date : 22/12/2025
.

செ.வெ.எண்: 52/2025

நாள்: 19.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இணை வேளாண்மைதுறை அலுவலகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் (GTM) புங்கன், வாகை, மகிழம் மற்றும் பாதாம் உள்ளிட்ட 60 வகையிலான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இணை வேளாண்மைதுறை அலுவலகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் (GTM) புங்கன், வாகை, மகிழம் மற்றும் பாதாம் உள்ளிட்ட 60 வகையிலான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை இன்று (19.12.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக இருந்ததை ”பசுமை தமிழக இயக்கம்” என்ற திட்டத்தின் மூலம் 33 சதவீதமாக உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு வனத்துறை சார்பில் கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிம்டெட் (KICL), எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், திண்டி “மா”வனம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் (GTM) ஆகியவற்றுடன் இணைந்து 2,000 மரக்கன்றுகளை அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள துணை வேளாண்மைதுறை அலுவலகத்தில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (GTM) புங்கன், வாகை, மகிழம் மற்றும் பாதாம் உள்ளிட்ட 60 வகையிலான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணியினை கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெரும் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (பெரியகுளம்) மற்றும் வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனம் (பொள்ளாச்சி) மாணவ, மாணவியர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், விவசாயத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் தேவையான மழை அளவினை பெற வேண்டும் என்றால் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். மழையின் இன்றியமையாமை குறித்தும், அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால்தான் போதுமான மழையளவினை பெற முடியும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் திரு.நாகசதீஸ்கிடிஜாலா, இ.வ.ப., அவர்கள், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர். ம.ரமேஷ் அவர்கள், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திருமதி.பா.காயத்ரி அவர்கள், வனச்சரக அலுவலர்கள் மற்றும் மாவட்ட பசுமைத்தோழி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.