Close

Women’s race event in honor of International Women’s Day.

Publish Date : 04/03/2026

செ.வெ.எண்:-10/2026

நாள்:-03.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் திண்டுக்கல் மாவட்டம் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ஆனது 08.03.2026 அன்று காலை 8.30 மணி முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியானது 13 வயதுக்கு கீழ், 13 முதல் 18 வயது வரை மற்றும் 18 வயதிற்கு மேல் என மூன்று பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ள பெண்கள் 06.03.2026 அன்று மாலைக்குள் 7806916985 மற்றும் 9994233607 ஆகிய கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் இந்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.