Close

Press Release

Filter:
No Image

BC WELFARE DEPT

Published on: 04/11/2025

செ.வெ.எண்:-05/2025 நாள்:-01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள் 13.10.2025-ல், ஹஜ் 2026-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பங்களை வரவேற்கிறது. தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாதகாலமாகும். மத்திய/மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப்படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – (KEERANOOR)

Published on: 03/11/2025

செ.வெ.எண்:-04/2025 நாள்: 01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை மற்றும் உயர்மின் கோபுர மின் விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – GRAMA SABHA

Published on: 03/11/2025

செ.வெ.எண்:-03/2025 நாள்: 01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சரவணம்பட்டி ஊராட்சியில் இன்று (01.11.2025) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் […]

More
.

GRAMA SHABA – ULLACHI DAY

Published on: 03/11/2025

செ.வெ.எண்:-02/2025 நாள்:01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் இன்று (01.11.2025) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் […]

More
.

TREE PLANTATION

Published on: 03/11/2025

செ.வெ.எண்: 01/2025 நாள்: 01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட செங்கட்டான் குளத்தில் நடைபெற்ற ”சங்க இயல் வனம்” துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 100 வகையான மரவகைகள் மற்றும் பனவிதைகள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக இருந்ததை ”பசுமை தமிழக இயக்கம்” […]

More
.

Election Training

Published on: 03/11/2025

செ.வெ.எண்:-78/2025 நாள்:-31.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், 129- ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொர்பான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொர்பான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister-Ungaludan Stalin camp

Published on: 03/11/2025

செ.வெ.எண்:-77/2025 நாள்: 31.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் இன்று (31.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை […]

More
.

COLLECTOR INSPECTION

Published on: 01/11/2025

செ.வெ.எண்: 76/2025 நாள்: 31.10.2025 திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாநகராட்சி கென்னடி நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளி, திண்டுக்கல் கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூவனூத்து ஊராட்சி, கவராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் […]

More
.

Election Meeting

Published on: 01/11/2025

செ.வெ.எண்:-74/2025 நாள்:30.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் […]

More
No Image

AGRICULTURE DEPARTMENT

Published on: 01/11/2025

செ.வெ.எண்:-73/2025 நாள்:-30.10.2025 திண்டுக்கல் மாவட்டம் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2025-அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வரும் காலங்களில், தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு சலுகைகளைப் பெற்றிட தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை […]

More
No Image

GRAMA SABHA MEETING – Agenda

Published on: 30/10/2025

செ.வெ.எண்:- 72/2025 நாள்: 29.10.2025 திண்டுக்கல் மாவட்டம் கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் 01.11.2025-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 01.11.2025-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராம சபை கூட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கூட்டப் பொருள்கள் விவரம் பொருள் 1: கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு […]

More
No Image

AC EXCISE – Tasmac Closed

Published on: 30/10/2025

செ.வெ.எண்:-71/2025 நாள்:-29.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் நகரில் வருகின்ற 30.10.2025 அன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் அனுசரிக்கப்பட இருப்பதால், பொது அமைதி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கிணைப் பாதுகாக்கும் பொருட்டும், குருபூஜை நிகழ்வு அமைதியாக நடைபெறும் பொருட்டும், திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைரோடு கடை எண்.3161 மற்றும் பள்ளப்பட்டி சிப்காட் கடை எண்.3342, விளாம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் […]

More
.

The Food and Civil Supply Minister – Ungaludan Stalin – (ODC)

Published on: 30/10/2025

செ.வெ.எண்:-70/2025 நாள்:29.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புலியூர்நத்தம், புளியமரத்துக்கோட்டை, கேதையுறும்பு ஆகிய ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில்,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புலியூர்நத்தம், புளியமரத்துக்கோட்டை, கேதையுறும்பு ஆகிய ஊராட்சிகளில் இன்று(29.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை […]

More
.

Coffee with collector

Published on: 29/10/2025

செ.வெ.எண்:-67/2025 நாள்:-27.10.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – அரசு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 13.10.2025 வரை 16 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த […]

More
No Image

Dic – Notification

Published on: 29/10/2025

செ.வெ.எண்:-68/2025 நாள்:-27.10.2025 திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழக அரசால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் “கலைஞர் கைவினைத் திட்டம் (KKT) ” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அரசு […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 29/10/2025

செ.வெ.எண்:-65/2025 நாள்:-27.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.10.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

More
.

DISASTER MANAGEMENT DEPT

Published on: 29/10/2025

செ.வெ.எண்:-66/2025 நாள்:27.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(27.10.2025) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2025 முன்னெச்சரிக்கையை எதிர்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 84 பகுதிகள் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறிப்பட்டுள்ளன. அதில் 24 பகுதிகள் அதிகம் பாதிப்பு […]

More
No Image

Employees Welfare Schemes

Published on: 27/10/2025

செ.வெ.எண்:-64/2025 நாள்:-25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 1,01,473 தொழிலாளர்களுக்கு ரூ.122.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் வாயிலாக பயனடைந்த தொழிலாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். குறிப்பாக, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு […]

More
No Image

TOURISM DEPARTMENT

Published on: 27/10/2025

செ.வெ.எண்:-63/2025 நாள்:-25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்டம், புல்லாவெளி அருவி மற்றும் ஒட்டன்சத்திரம்-இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைப்பகுதிகளில் பல்வேறு வகையான சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் செய்திடும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 13.10.2025-அன்று தலைமைச் செயலகத்தில், ரூ.4.8 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேலும், சிறுமலைப்பகுதியில் ரூ.10.00 கோடி […]

More
No Image

TOWN PANCHAYAT

Published on: 27/10/2025

செ.வெ.எண்:-62/2025 நாள்:-25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும் வருகின்ற 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும் வருகின்ற 27.10.2025 முதல் 29.10.2025 வரை சிறப்பு வார்டு கூட்டம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அனைத்து பேரூராட்சிகளிலும் மன்ற வார்டு உறுப்பினர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள பொதுமக்கள் […]

More
No Image

PHOTO EXHIBITION – VADAMADURAI UNION AREA

Published on: 27/10/2025

செ.வெ.எண்:- 61/2025 நாள்:25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியம், தென்னம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (25.10.2025) […]

More
No Image

ODDANCHATRAM MUNICIPALITY

Published on: 27/10/2025

செ.வெ.எண்:-60/2025 நாள்:-25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில், 27.10.2025ம் தேதியில் வார்டு எண்2, 9, 10, 13 மற்றும் 14 காலை 11.00 மணியளவிலும், வார்டு எண்11க்கு மாலை2.00 மணியளவிலும், வார்டுஎண் 1, 3, 4, 5, 6, 7, 8, 12, 15, 16, 17, 18 க்கு மாலை3.00 மணியளவிலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் நகராட்சியின் மூலம் வழங்கப்படும் சேவைகளான குடிநீர் […]

More
No Image

KODAIKKANAL MUNICIPAL

Published on: 27/10/2025

செ.வெ.எண்:-59/2025 நாள்:-24.10.2025 பத்திரிகை செய்தி கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில், வார்டு எண்.2 முதல் 13யிலான 12 வார்டுகளுக்கு 27.10.2025 அன்று காலை 11.00 மணியளவிலும், வார்டு எண்.1 மற்றும் 14 முதல் 24 வரையிலான 12 வார்டுகளுக்கு 28.10.2025 அன்று காலை 11.00 மணியளவிலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. மேற்கண்ட கூட்டங்களில் நகராட்சியின் மூலம் வழங்கப்படும் சேவைகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு மற்றும் இதர […]

More
No Image

DINDIGUL CORPORATION

Published on: 27/10/2025

செ.வெ.எண்:-58/2025 நாள்:-24.10.2025 பத்திரிகை செய்தி அரசாணை எண். 324 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள். 17.10.2025-ன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் / நகராட்சி மன்ற உறுப்பினர்கள் தலைமையில், பொது மக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் பங்கேற்புடன் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. வார்டுகள் […]

More
.

Agri Grievance Day Petition

Published on: 27/10/2025

செ.வெ.எண்: 57/2025 நாள்: 24.10.2025 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (24.10.2025) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள சின்னக்குளம் தூர்வாரப்பட வேண்டும். மேலும், குளத்தில் கழிவுநீர் கலக்கப்படுவதால் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பழனி […]

More
No Image

SOCIAL WELFARE DEPT – SHE BOX

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-57/2025 நாள்: 24.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்-2013 (தடுப்பு, தடை மற்றும் தீர்வு)-ன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு 31.10.2025-க்குள் அமைத்து, அதன் விவரத்தினை SHE BOX இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் அறிக்கையினை திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு […]

More
.

TH-Food Minister-Ungaludan Stalin Ottanchathram

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-55/2025 நாள்: 24.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி ஊராட்சிகளில் இன்று (24.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, […]

More
.

Education Tour

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-54/2025 நாள்: 23.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தினை பார்வையிடுவதற்கு சுற்றுலா களபயணம் வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதற்காகவும், உயர் கல்வி பயில்வதற்குரிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் அவ்வப்போது களப்பயணங்கள் ஏற்பாடு செய்து […]

More
No Image

BC WELFARE DEPT

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-52/2025 நாள்:-23.10.2025 திண்டுக்கல் மாவட்டம் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2025-2026ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister Unkaludan Stalin Program- Thoppampatty

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-53/2025 நாள்: 23.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தாளையூத்து ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தாளையூத்து ஊராட்சியில் இன்று (23.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, […]

More
No Image

DDAWO DEPT

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-51/2025 நாள்:-23.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். உலக மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2025-அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளில் சிறந்தபணியாளர்/சுயதொழில் புரிபவர்களுக்கு மாநில அளவில் 10 விருதுகளும், பார்வைத் […]

More
No Image

TAHDCO DEPT – TATOO MAKING, AESHETIC TRAINING COURSE AND SEMI PERMANENT MAKEUP COURSE

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-50/2025 நாள்:-22.10.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ, தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Thoppampatty ( Deepavali Wishes)

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-49/2025 நாள்:-18.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தீபாவளி திருநாளை முன்னிட்டு கீரனூர் பேரூராட்சி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 744 தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று(18.10.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கீரனூர் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Oddanchatram(Deepavali Wishes)

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-48/2025 நாள்:-18.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 1053 தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று(18.10.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் […]

More
.

BC WELFARE DEPT

Published on: 22/10/2025

செ.வெ.எண்: 43/2025 நாள்: 17.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட சமூகநீதி விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட சமூகநீதி விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன […]

More
No Image

TNSRLM-College bazaar-Magalir Thittam

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-46/2025 நாள்:-17.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 630 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.52.86 இலட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தை வாய்ப்பு கிடைத்ததால் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு, ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், பாதுகாக்கும் வகையிலும், அவர்களின் துயரை துடைக்க, […]

More
No Image

AGRI Grievance Day Petition

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-45/2025 நாள்:-17.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் […]

More
No Image

HEALTHCARE CERTIFICATE COURSE

Published on: 22/10/2025

செ.வெ.எண்: 44/2025 நாள்: 17.10.2025 திண்டுக்கல் மாவட்டம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்க்கான திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. 1.வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சிகள்: வ.எண் பாடப்பிரிவின் பெயர் 1 Emergency Care Technician 2 Dialysis Technician 3 Anesthesia Technician 4 Theatre Technician 5 […]

More
No Image

TNPCB – POLLUTION FREE DEEPAVALI

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-40/2025 நாள்:-16.10.2025 திண்டுக்கல் மாவட்டம் Press Release Let us celebrate a Noiseless and Smoke Pollution Free Deepavali-2025 We all know Deepavali is one of the important festivals celebrated by people of our country. During Deepavali along with wearing of new clothes and distribution of sweets, bursting of crackers &colourful lights havebecome customary for many generations to […]

More
.

SANITATION GUARDS – COLLECTOR DEEPAVALI WISHES

Published on: 17/10/2025

செ.வெ.எண்: 41/2025 நாள்: 16.10.2025 திண்டுக்கல் மாவட்டம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தூய்மை காவலர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;- தமிழ்நாடு […]

More
.

PHOTO EXHIBITION – NATHAM UNION

Published on: 17/10/2025

செ.வெ.எண்:- 40/2025 நாள்:15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (15.10.2025) […]

More
.

FOREST DEPARTMENT

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-39/2025 நாள்:-15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ம.மூ. கோவிலுார் கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., அவர்கள் இன்று (15.10.2025) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வு 24.09.2025 முதல் தொடங்கப்பட்டது. […]

More
No Image

BCWO-TABCEDCO EDUCATION LOAN

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-38/2025 நாள்:-15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் 100 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். கடனுக்கான தகுதி மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்: 1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் (சாதிச் சான்றிதழ்) 2. குடும்ப ஆண்டு […]

More
No Image

AGRICULTURE DEPARTMENT (STARTUP)

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-37/2025 நாள்:-15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் கால்நடை துறை போன்றவற்றில் ஸ்டார்ட் அப் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம், மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளுடன் ஆரம்பிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மதிப்புக் […]

More
No Image

AGRICULTURE DEPARTMENT

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-36/2025 நாள்:-15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 2025-2026-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை […]

More
No Image

Collector Inspection

Published on: 16/10/2025

செ.வெ.எண்: 36/2025 நாள்: 14.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், விருவீடு ஊராட்சியில் […]

More
.

HIGHER EDUCATION TOUR

Published on: 16/10/2025

செ.வெ.எண்:-35/2025 நாள்:-14.10.2025 திண்டுக்கல் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் பழனி ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (14.10.2025) அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம் […]

More
No Image

EMPLOYMENT UR

Published on: 14/10/2025

செ.வெ.எண்:-34/2025 நாள்:-14.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் […]

More
No Image

EXHIBITION (MAHALIR THITTAM)

Published on: 14/10/2025

செ.வெ.எண்:-33/2025 நாள்:-13.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியில் 15.10.2025 முதல் 17.10.2025 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியில் 15.10.2025 முதல் 17.10.2025 வரை கல்லூரி சந்தை விற்பனை […]

More
.

COFFEE WITH COLLECTOR

Published on: 14/10/2025

செ.வெ.எண்:-31/2025 நாள்:-13.10.2025 திண்டுக்கல் மாவட்டம் Coffee with Collector’ – கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த அரசுப்பள்ளி மாணவ/மாணவியருடன் உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 06.10.2025 வரை 15 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி […]

More