ஊடக வெளியீடுகள்
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற 09.09.2026 முதல் 29.09.2026 வரை குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் வாரியாக நடைபெறவுள்ளது PDF [158 KB]
சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக 13 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் 31 விருதுகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்களும் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 104KB]
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 97KB]
விபத்தில் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி.
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், வடமதுரை கிராமத்திற்குட்பட்ட கொல்லப்பட்டி – புத்தூர் சாலையில் பால்வண்டி மோதிய விபத்தில் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். [PDF 83KB]
EMIS மூலம் பொதுமாறுதல் கலந்தாய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் (EMIS) பொதுமாறுதல் கலந்தாய்வு மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கள்ளர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகளுக்கு நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 93KB]
விநாயகர் சிலைகளை குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டுகோள்.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 89KB]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் 5 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-மதிப்பீட்டிலான சிறு விற்பனை பொருட்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கான சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார். [PDF 135KB]
மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் CPCB-ல் பதிவு செய்து EBWGR இணக்கச் சான்றிதழ் பெறுவது அவசியம்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026அரசின் விதிமுறைகளின்படி, அனைத்து மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் (BWGs) மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக கட்டாயமாக பதிவு செய்தும் மற்றும் “விரிவாக்கப்பட்ட மொத்தக் கழிவு உருவாக்குபவர் பொறுப்பு” (EBWGR) தொடர்பான விதிகளின்படியும், மாநகராட்சி/நகராட்சி மூலம் நிர்ணயிக்கப்பட்ட EBWGR சான்றிதழ் அல்லது இணக்கச் சான்றிதழ் (Proof of Compliance) ஆகியவைகளை பெறுதல் அவசியமாகும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 101KB]
அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026திண்டுக்கல் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளைய தினம் (29.08.2026) அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை / கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 123KB]