ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் – தம்ம சக்கர பரிவர்தன திருவிழா – மானியம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்துகொள்ளும் பௌத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் PDF [67KB]

படங்கள் ஏதும்  இல்லை

2027 ஆம் ஆண்டில் புனித ஹஜ் பயணம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

2027-ஆம் ஆண்டில் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப நிகர்நிலை மூலம் (Online) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72KB]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 135KB]

கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். [PDF 152KB]

கொடைக்கானலில் 24 மணி நேர தானியங்கி பால் விநியோக இயந்திரம் தொடக்கம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

கொடைக்கானல் பகுதியில் நெகிழி (பாலீத்தின்) பைகளின் உபயோகத்தை தவிர்த்திடும் பொருட்டு அதிநவீன பாலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தானியங்கி பால் விநியோக இயந்திரத்தினை (Automatic Milk Vending Machine) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். . [PDF 153KB]

சுதந்திர தின கிராம சபைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், குன்னுவராயன்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்றார்.. [PDF 141KB]                              

Transport

திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சுதந்திர தின விழா.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்-ன், திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழாவினையொட்டி பொது மேலாளர் திரு. ஆ.முத்துகிருஷ்ணன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து, போக்குவரத்துக் கழகத்தின் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.. [PDF 60KB]

Independence

சுதந்திர தின விழா – 2026

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த 69 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், அரசின் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 213 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கி, 48 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 98 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. [PDF 193KB]                     […]

Inspection

வேடசந்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வருவாய்த்துறை சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் மற்றும் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்தும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 100KB]                                 […]