Close

Press Release

Filter:
No Image

Chief Minister’s Houses Reconstruction Scheme – Notification

Published on: 12/04/2025

செ.வெ.எண்:-38/2025 நாள்:-12.04.2025 திண்டுக்கல் மாவட்டம் “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ..ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசின் “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற புதிய திட்டத்தின் கீழ், 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாட்கோ, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், ஊரக பகுதிகளில் கட்டப்பட்டு, முழுவதும் பழுதடைந்து தற்போது பழுதுபார்க்க முடியாத நிலையில் […]

More
No Image

Ex-Service man dept

Published on: 12/04/2025

செ.வெ.எண்:-34/2025 நாள்:-11.04.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடத்தை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் காலியாக உள்ள காவலர் (Watchman) பணியிடத்திற்கு மாத தொகுப்பூதிய அடிப்படையில் ரூ.10,000/-ற்கு பணியமார்த்திட திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், […]

More
No Image

District Sports Officer Dindigul (STAR ACADEMY)

Published on: 12/04/2025

செ.வெ.எண்:-37/2025 நாள்:-11.04.2025 திண்டுக்கல் மாவட்டம் ஸ்டார் அகாடாமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் சார்பில் இறகுப்பந்து பயிற்சிக்காக பயிற்றுநர் தேர்வு மற்றும் இறகுப்பந்து பயிற்சியில் சேர்வதற்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான மான்ய கோரிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் (STAR ACADEMY) […]

More
No Image

DM TAHDCO- Aari Embroidery and Hand Printing On Textiles

Published on: 12/04/2025

செ.வெ.எண்:-36/2025 நாள்:-11.04.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் […]

More
No Image

Differently Abled Special – Grievance Day Petition

Published on: 12/04/2025

செ.வெ.எண்:-33/2025 நாள்:-11.04.2025 திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.04.2025 அன்று நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 17.04.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கம் […]

More
No Image

Fisheries and Fishermen Welfare

Published on: 12/04/2025

செ.வெ.எண்:-32/2025 நாள்:-11.04.2025 திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பரப்பலாறு, சின்னபெரியகோம்பை மற்றும் குதிரையாறு நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பரப்பலாறு, சின்னபெரியகோம்பை மற்றும் குதிரையாறு நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 07.04.2025 முதல் 21.04.2025 பிற்பகல் 02.00 […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister (Kalanjipatty)

Published on: 12/04/2025

செ.வெ.எண்:-31/2025 நாள்:-11.04.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் காளாஞ்சிப்பட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைப்பு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிலக்கூடிய தேர்வர்களுடன் கலந்துரையாடினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காளாஞ்சிப்பட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைப்பு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிலக்கூடிய தேர்வர்களுடன் இன்று(11.04.2025) கலந்துரையாடினார். இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் […]

More
.

The Hon’ble Rural Development Minister and Food Minister Program (ODC)

Published on: 12/04/2025

செ.வெ.எண்:-30/2025 நாள்:-11.04.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை திறந்து வைத்தார்கள். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.காந்திராஜன், ஆகியோர் தலைமையில் […]

More
No Image

DSO-Second Saturday Special Camp

Published on: 11/04/2025

செ.வெ.எண்:-28/2025 நாள்:-10.04.2025 திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 12.04.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 12.04.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் […]

More
No Image

C.M. State Youth Award

Published on: 11/04/2025

செ.வெ.எண்:-27/2025 நாள்:-10.04.2025 திண்டுக்கல் மாவட்டம் ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் […]

More
No Image

NMP- Cook Assistant – Notification

Published on: 11/04/2025

செ.வெ.எண்:-27/2025 நாள்:-09.04.2025 திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி மற்றும் நகராட்சி வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், […]

More
.

Mass contact-Ramanathapuram-GP TK

Published on: 11/04/2025

செ.வெ.எண்:-24/2025 நாள்:-09.04.2025 திண்டுக்கல் மாவட்டம் கோ.ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 158 பயனாளிகளுக்கு ரூ.18.34 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், வெம்பூர்நல்லுார் ஊராட்சி, கோ.ராமநாதபுரத்தில் இன்று(09.04.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 158 பயனாளிகளுக்கு ரூ.18.34 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். […]

More
No Image

Employment – UES – Notification

Published on: 11/04/2025

செ.வெ.எண்:-25/2025 நாள்:-09.04.2025 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக […]

More
No Image

Animal Husbandry(NLM)

Published on: 09/04/2025

செ.வெ.எண்:-23/2025 நாள்:-08.04.2025 திண்டுக்கல் மாவட்டம் கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றிப்பண்ணைகள் அமைத்திட மானியம் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், அரசு நிதியுதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. அதன்படி, புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் மாவட்டம் மற்றும் மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 08/04/2025

செ.வெ.எண்:-19/2025 நாள்:-07.04.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு சுமார் ரூ.88,000/- ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(07.04.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, […]

More
No Image

Agri Grievance Day Petition

Published on: 08/04/2025

செ.வெ.எண்:-21/2025 நாள்:-07.04.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் […]

More
No Image

Manimegalai Award

Published on: 08/04/2025

செ.வெ.எண்:-20/2025 நாள்:-07.04.2025 திண்டுக்கல் மாவட்டம் 2024-25-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024-25-ஆம் ஆண்டிற்கான மாநில, மாவட்ட அளவிலான தகுதியான சிறந்த 10 சுய உதவிக்குழுக்கள் (SHG)/ 5 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் (VPRC) / 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF) /ஒரு வட்டார அளவிலான கூட்டமைப்பு (BLF) ஊரகப் பகுதிகளிலும், ஒரு நகர அளவிலான கூட்டமைப்பு (CLF), 3 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் […]

More
.

The Hon’ble Rural Development Minister Program – Batalagundu Town Panchayat

Published on: 07/04/2025

செ.வெ.எண்:-17/2025 நாள்:-06.04.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதுப்பட்டி மற்றும் காந்திநகரில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சிறப்பு நிலை […]

More
.

CSR Conclave 2025

Published on: 07/04/2025

செ.வெ.எண்:- 16/2025 நாள்:05.04.2025 திண்டுக்கல் மாவட்டம் சமூக பொறுப்பு நிதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் பார்சன் ஹோட்டலில் சமூக பொறுப்பு நிதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.04.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு நிதியிலிருந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் […]

More
.

Collector Meeting – Higher Education

Published on: 05/04/2025

செ.வெ.எண்:- 15/2025 நாள்:05.04.2025 திண்டுக்கல் மாவட்டம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியுள்ள மாணவ மாணவியர்கள் அனைவரையும் உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர் கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியுள்ள மாணவ மாணவியர்கள் அனைவரையும் உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர் கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட […]

More
No Image

Natham -Ungalai Thedi Ungal Ooril

Published on: 05/04/2025

செ.வெ.எண்:- 14/2025 நாள்:04.04.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 16.04.2025 அன்று செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு 08.04.2025 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “ உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது […]

More
No Image

DRY DAYS (MAHAVEER JEYANTHI)

Published on: 05/04/2025

செ.வெ.எண்:- 13/2025 நாள்:04.04.2025 திண்டுக்கல் மாவட்டம் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, 10.04.2025 அன்று மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த […]

More
.

The Hon’ble CM -VC – (Palani Kovil )

Published on: 05/04/2025

செ.வெ.எண்:- 12/2025 நாள்:04.04.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய பக்தி நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் கூடுதலாக 100 திருக்கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்¬, இ.ஆ.ப., அவர்கள் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆன்மிக புத்தக முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு […]

More
No Image

AC Labour Dindigul(Tamil Name Board)

Published on: 04/04/2025

செ.வெ.எண்:- 11/2025 நாள்:03.04.2025 திண்டுக்கல் மாவட்டம் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ் விதி 15-ன்படியும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும், தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ன் […]

More
.

Collector Inspection- (Vadamadurai Union)

Published on: 04/04/2025

செ.வெ.எண்:- 10/2025 நாள்:03.04.2025 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். வடமதுரை ஊராட்சி ஒன்றியம், மோர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் […]

More
No Image

District Employment and Career Guidance center (TNPSC GR – I)

Published on: 03/04/2025

செ.வெ.எண்:- 08/2025 நாள்:03.04.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group-I போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் […]

More
No Image

Tahdco Dindigul

Published on: 03/04/2025

செ.வெ.எண்:- 09/2025 நாள்:03.04.2025 திண்டுக்கல் மாவட்டம் தொழில் முனைவோருக்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் தொடங்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2024-25- […]

More
.

Press Tour (Tree growing )

Published on: 03/04/2025

செ.வெ.எண்:- 07/2025 நாள்:02.04.2025 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மைக்கேல் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மைக்கேல் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு இன்று (02.04.2025) ஆய்வு மேற்கொண்டனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் […]

More
.

Collector Inspection – Development work – Nilakottai Panchayat Union

Published on: 03/04/2025

செ.வெ.எண்:- 06/2025 நாள்:02.04.2025 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(02.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி […]

More
.

BC and MBC Dept – Notification

Published on: 02/04/2025

செ.வெ.எண்:-05/2025 நாள்: 02.04.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான அரசின் இணை மானியத்தொகை ரூ.40.00 இலட்சம் உதவித்தொகையை 245 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான அரசின் இணை மானியத்தொகை ரூ.40.00 […]

More
.

Palani Kovil -Panguni Festival-meeting

Published on: 02/04/2025

செ.வெ.எண்:-03/2025 நாள்: 01.04.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா 05.04.2025 முதல் 14.04.2025 வரை நடைபெறவுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை […]

More
.

Collector Inspection – (Agri dept and West Thasildar Office)

Published on: 02/04/2025

செ.வெ.எண்:-02/2025 நாள்:-01.04.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(01.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் […]

More
No Image

Kodaikanal E-Pass – Notification

Published on: 01/04/2025

செ.வெ.எண்:-01/2025 நாள்:-01.04.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை குறித்து – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ.பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் துவங்கப்பட உள்ளதால் கொடைக்கானல் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளின் வாகன […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister Program

Published on: 01/04/2025

செ.வெ.எண்:-81/2025 நாள்:-30.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 4-வது கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், […]

More
.

Collector Inspection – Kodaikanal Fest – 2025

Published on: 01/04/2025

செ.வெ.எண்:-80/2025 நாள்:-30.03.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடை விழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து கொடைக்கானல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா 2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(30.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

More
.

World Waterday Gramasaba

Published on: 29/03/2025

செ.வெ.எண்:-79/2025 நாள்:-29.03.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் இன்று(29.03.2025) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சி, பள்ளங்கி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]

More
.

Collector Inspection-scheme work-Vedasandur Union

Published on: 29/03/2025

செ.வெ.எண்:-78/2025 நாள்:-28.03.2025 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், இ.சித்துார் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், இ.சித்துார் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(28.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- […]

More
.

Collector Inspection-PT-KKI scheme Vedasandur Union

Published on: 28/03/2025

செ.வெ.எண்:-77/2025 நாள்:-28.03.2025 திண்டுக்கல் மாவட்டம் நாகையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(28.03.2025) செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி […]

More
.

SSLC examination – collector inspection

Published on: 28/03/2025

செ.வெ.எண்:-76/2025 நாள்:28.03.2025 திண்டுக்கல் மாவட்டம் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(28.03.2025) தொடங்குகின்றன. திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொது, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 28.03.2025 அன்று […]

More
.

Heat Related Illness – Meeting

Published on: 28/03/2025

செ.வெ.எண்:-75/2025 நாள்:-27.03.2025 திண்டுக்கல் மாவட்டம் வெப்பம் சார்ந்த நோய்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெப்பம் சார்ந்த நோய்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(27.03.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- கோடைகாலங்களில் கோடை வெயிலின் […]

More
No Image

DADWO-Career Guidance – Notification

Published on: 27/03/2025

செ.வெ.எண்:-73/2025 நாள்:-27.03.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் “என் கல்லுாரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் 30.03.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 12-ஆம் வகுப்பு […]

More
No Image

e-KYC – PHH & AAY Beneficiaries Finger Print

Published on: 27/03/2025

செ.வெ.எண்:-72/2025 நாள்:-26.03.2025 திண்டுக்கல் மாவட்டம் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகை பதிவினை e-KYC (electronic Know Your […]

More
.

District Child Protection Unit – DCPU- Notification

Published on: 27/03/2025

செ.வெ.எண்:-71/2025 நாள்:-26.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் உள்ள குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கெரோனாவால் தந்தை இறந்த நிலையில் தாயார் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த சிறுவன் இப்ராஹிம் (16) மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவால் முன்னிலைப்படுத்தப்பட்டு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலமாக தற்காலிக வளர்ப்பு […]

More
.

NEET Training Class

Published on: 27/03/2025

செ.வெ.எண்:-70/2025 நாள்:-26.03.2025 திண்டுக்கல் மாவட்டம் நீட் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில், நீட் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.03.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]

More
.

Collector letter to 10th students

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-69/2025 நாள்: 25.03.2025 திண்டுக்கல் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 28.03.2025 அன்று தொடங்கி 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 21,757 மாணவ, மாணவிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அஞ்சல் அட்டை வாயிலாக […]

More
No Image

TNSRLM-Buyer-Seller Meeting

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-67/2025 நாள்: 25.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம்(Buyer, Seller Meet) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் […]

More
No Image

Exwel medical camp

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-68/2025v நாள்: 25.03.2025 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் 26.03.2025 அன்று நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தினைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் 26.03.2025 அன்று முற்பகல் 10.30 […]

More
No Image

TAHDCO – Innovation Fellowship program

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-66/2023 நாள்: 24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை […]

More
No Image

TAHDCO – JEE Mains

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-65/2025 நாள்: 24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான(JEE Mains) பயிற்சியில் சேர இணையதளத்தில் பதிவு செய்து, பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் […]

More
No Image

TNSRLM-Buyer-Seller Meet

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-64/2023 நாள்: 24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல் பார்சன்ஸ் ஹோட்டலில் 25.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி […]

More