ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக நாளைய தினம் (19.09.2026) குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 112KB]

படங்கள் ஏதும்  இல்லை

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 19.09.2026 அன்று e-KYC முகாம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு வருகின்ற 19.09.2026-அன்று அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 52KB]

Farmers’

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF  89KB]

படங்கள் ஏதும்  இல்லை

அருள்மிகு ஆயிரம் அருவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் ஆண்டு திருவிழா தை 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சேவுகம்பட்டி கிராமம், உட்கடை முத்துலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆயிரம் அருவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் 03-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. [PDF 63KB]

Pledge

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் பொது மேலாளர் திரு. ஆ. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றனர்.. [PDF 142KB]

Ungal Ooril

உங்களைத் தேடி உங்கள் ஊரில்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், கொடைக்கானல் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 114KB]                                           […]

Photo Exhibition

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

சின்னாளபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.. [PDF 60KB]

படங்கள் ஏதும்  இல்லை

தடை செய்யப்பட்ட மற்றும் பூஜ்ஜிய மதிப்பீடு செய்யப்பட்ட நிலப் பதிவுகளை சரிபார்க்க சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம்.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

அரசாணை(நிலை) எண்.119, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை SS-1(2) துறை, நாள்:02.02.2026-ன்படி, வருவாய் ஆவணங்கள் கணினி மயமாக்கலின்போது தடை செய்யப்பட்ட (Blocked**)** நிலங்கள் மற்றும் பத்திரப் பதிவுத்துறையினரால் பூஜ்ஜியம் (Zero) என மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்கள் பத்திரப் பதிவு செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. எனவே இந்த பதிவுகளை சரிபார்க்க திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (பதிவுகள் சரிபார்ப்பு) அரசால் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தடையினங்கள் […]

Honours

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

2025-2026-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 121 தலைமையாசிரியர்களை கௌரவிக்கும் வகையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், தனது சொந்த நிதியிலிருந்து பாராட்டு கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார். [PDF 72KB]